Home லைப்ஸ்டைல் ஆரோக்கியம் கொரானாவின் மூணாவது அலையை காணாமல் போக செய்யும் முன்னெச்சரிக்கை முறைகள்

கொரானாவின் மூணாவது அலையை காணாமல் போக செய்யும் முன்னெச்சரிக்கை முறைகள்

கொரானாவின் மூணாவது அலையை காணாமல் போக செய்யும் முன்னெச்சரிக்கை முறைகள்

கடந்த ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. இதில் ஒரு கோடி பேருக்கு மேல் பாதிக்கப்பட்டனர். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இறந்து போனார்கள். தற்போது கொரானா வைரஸ் 2-வது அலை இந்தியாவில் அதிவேகமாக பரவி வருகிறது. தற்போது கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.மூணாவது அலை வந்தால் அதை தடுக்க சில முன்னெச்சரிக்கை முறைகள் பற்றி பார்க்கலாம்

காது, மூக்கு, தொண்டையில் கொரோனா வைரஸ் ஏற்படுத்தும் பாதிப்புகள்

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

கொரானா நோயாளிக்கு  சுவாசிக்க ஆக்சிசன் உதவி தேவைப்படுகிறது. ஆனால், நோய்த்தொற்று பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க முடியும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க, வீட்டின் சுற்றுப்புறத்தில் வேப்பிலை, மஞ்சள் கலந்த நீர் தெளிக்க வேண்டும். தினமும் காலையில் மிதமான சூட்டில் கல் உப்பால் வாய் கொப்பளிக்க வேண்டும்.

தொண்டை வறண்டு போகாமல் இருக்க 2 வேளை வெந்நீர் குடிக்க வேண்டும். வேப்பிலை, நொச்சி இலை மற்றும் மஞ்சள் சேர்த்து தினமும் சுவாசத்துக்கான நீராவி பிடிக்க வேண்டும். மஞ்சள், வேப்பிலை, கற்றாழை மற்றும் படிகாரம் கலந்த நீரை கைகழுவ பயன்படுத்தலாம். காலையில் தோல் சீவிய இஞ்சி, எலுமிச்சை தோலுடன் மிளகு சேர்த்து காய்ச்சி தேன் கலந்து குடிக்க வேண்டும்.

தினமும் மாலை சுக்கு, கொத்தமல்லி கலந்த பானம் தேனில் கலந்து அருந்த வேண்டும். இரவில் சூடான பாலில் மஞ்சள், மிளகு சேர்த்து குடிக்க வேண்டும். சுண்டைக்காய், பாகற்காய், திணை, சாமை, கேழ்வரகு, குதிரைவாலி, வேப்பம் பூ, தூதுவளை ரசம் ஆகிய உணவுகளை சாப்பிட வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நெல்லிக்காய், கொய்யாப்பழம், பப்பாளி, ஆரஞ்சு, சாத்துக்குடி உள்ளிட்ட பழங்களை தினமும் சாப்பிட வேண்டும்.

அலர்ஜி, ஆஸ்துமா, சைனஸ் நோயாளிகள், வயதானவர்கள் முள்ளங்கி, சுரைக்காய், பூசணி, வெள்ளரிக்காய் ஆகியவற்றையும், எலுமிச்சை, தயிர், மாதுளை, திராட்சை போன்ற உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். கொண்டைக்கடலை, பாதாம்பருப்பு, நிலக்கடலை ஆகியவற்றை சுண்டல் செய்து சாப்பிடலாம். தினமும் காலை 10 மணிக்குள்ளும், மாலை 4 மணிக்கு பிறகும் உடம்பில் வெயில்படுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

இதன் மூலம் நோய்த்தொற்று பரவாமல் நம்மை நாமே பாதுகாத்துக்கொள்ள முடியும். கபம் தொடர்பான நோய்களுக்கு சித்தர்களின் ஓலைச்சுவடிகளில் பலதரப்பட்ட மருந்து குறிப்புகள் சொல்லப்பட்டுள்ளன. அதன்படியே, தற்போது சித்த மருந்துகள் கொரோனா நோயாளிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு வருகிறது. கொரோனா நோயாளிகளை அறிகுறிகள் இல்லாதவர்கள், மிதமான பாதிப்பு, சாதாரண பாதிப்பு மற்றும் தீவிர பாதிப்பு என 4 வகையினராக பிரிக்கின்றனர்.

இதில், மிதமான மற்றும் சாதாரண பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு சித்த மருந்துகள் மட்டும் நோய்த்தொற்றை குணப்படுத்த போதுமானது. பிற பிரிவினருக்கு ஆங்கில மருந்துகளுடன், சித்த மருத்துவமும் சேர்ந்து கிடைக்கும் போது விரைவில் குணமடைகின்றனர்.

நீராவி பிடிக்கும் வழிமுறைகள்

காலை, மாலை நேரங்களில் தொடர்ந்து சுவாசத்துக்கான நீராவி பிடித்தால் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் இருந்து நிவாரணம் பெற முடியும். இதற்கு கல் உப்பு, விரலி மஞ்சள்தூள், வேப்பிலை, நொச்சி இலை, துளசி இலை மற்றும் ஓமவள்ளி இலை ஆகியவற்றை சுத்தமான தண்ணீரில் நன்றாக கொதிக்க வைத்து வாய் மற்றும் மூக்கு பகுதியில் நீராவி படும்வகையில் 3 நிமிடம் ஆவி பிடிக்க வேண்டும். அப்போது, காற்றை இழுத்து சுவாசிக்க வேண்டும். இவ்வாறு செய்யும் போது, அவ்வப்போது தொற்றிக்கொள்ளும் வைரஸ் கிருமிகள் அழிக்கப்படும்.

கொரானாவின் மூணாவது அலையை காணாமல் போக செய்யும் முன்னெச்சரிக்கை முறைகள்
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

“கட்சிகளுக்கு புதிய சின்னங்களை ஒதுக்குவது வாக்காளர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும்”

ஒவ்வொரு தேர்தலிலும் கட்சிகளுக்கு புதிய சின்னங்கள் ஒதுக்கீடு செய்வது வாக்காளர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பதில்...

ஆன்லைன் வகுப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகள்

கொரொனா பரவலால் தமிழக பள்ளி, கல்லூரி மானவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டுவருகின்றன. ஆன்லைன் வகுப்புகளுக்கான நெறிமுறைகள் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

’’பொய் சொன்னா அறைவேன் என்று சொன்ன நடிகர் சித்தார்த் எங்கே?’’

16வது சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் இன்று கலைவாணர் அரங்கில் தொடங்கியது. புதிய ஆசி பொறுப்பேற்ற பின்னர் நடைபெறம் இந்த முதல் கூட்டத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையில் இடம்பெற்றிருப்பது குறித்து...

தளபதி 65 படத்தின் தலைப்பு அறிவிப்பு

நடிகர் விஜய் 65வது படத்தின் First Look வெளியானது. நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் அவரது...
- Advertisment -
TopTamilNews