சுகரில்லாத புதிய தலைமுறைய உருவாக்க ,நிகரில்லாத இந்த புரோட்டின சேர்த்துக்கோங்க

 

சுகரில்லாத புதிய தலைமுறைய உருவாக்க ,நிகரில்லாத இந்த புரோட்டின சேர்த்துக்கோங்க

.

நீரிழிவு நோய் பாதிப்பில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா தான் இரண்டாவது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு வரை இந்தியாவில் 77 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்தி அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மற்ற ஆய்வுகள் அடுத்த 25 ஆண்டுகளுக்குள் 134 மில்லியன் நீரிழிவு நோயாளிகள் இந்தியாவில் இருக்கக்கூடும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

சுகரில்லாத புதிய தலைமுறைய உருவாக்க ,நிகரில்லாத இந்த புரோட்டின சேர்த்துக்கோங்க

புரதப் பற்றாக்குறை இருப்பவர்களுக்கே இரத்த சர்க்கரை அளவு உயர்கிறது. எனவே டயாபெட்டீஸ் நோயை தடுக்க நீங்கள் ஒரு நாளைக்கு எவ்வளவு புரோட்டீன் அளவு எடுத்துக் கொள்ள வேண்டும் என அறிந்து கொள்ளுங்கள்.

நமக்கு ஏற்படும் புரத குறைப்பாட்டிற்கும் நீரிழிவு நோய்க்கும் நிறையத் தொடர்பு உள்ளது என்கிறார்கள் ஆய்வாளர்கள். இந்த நீரிழிவு நோய் குறிப்பாக உலகளவில் இந்தியர்களை பாதித்து வருகிறது.

1.. காளான்

புரதச்சத்து நிறைந்த உணவுகள் வரிசையில் காளானும் உண்டு. காளானை வேகவைத்தோ, சூப்பாகச் செய்தோ…சாப்பிடலாம்

2.. பட்டாணி

புரதம் நிறைந்த உணவுகளில் பட்டாணி மிக முக்கியமானது. இதில் புரதச்சத்து நிறைய உள்ளது

3. முட்டை

முட்டையில் புரதச்சத்து நிறைந்து காணப்படுகிறது, நன்றாக உடற்பயிற்சி செய்பவர்கள், தினமும் அதிகமாக உடல் உழைப்பு செய்பவர்கள் தினமும் ஒரு முட்டை சாப்பிடலாம். மற்றவர்கள் வாரம் மூன்று முட்டை சாப்பிடலாம். 100 கிராமில் 13 கிராம் புரதம் இருக்கிறது.

4. அசைவ உணவுகள்

சிக்கன் போன்ற அசைவ உணவுகளில் புரதச்சத்து அதிகமாக இருக்கிறது. சிக்கனை எண்ணெயில் பொறித்து சாப்பிடக்கூடாது. ஹார்மோன் ஊசிகள் ஏற்றப்படாத நல்ல நாட்டுக்கோழியை வாரம் 300 – 500 கிராம் அளவுக்கு நீராவியில் வேகவைத்து, மசாலா தடவாமல் சாப்பிடலாம். சிக்கன் சாலட் செய்தும் சாப்பிடலாம். 100 கிராம் கோழி இறைச்சியில் 27 கிராம் புரதம் உள்ளது.

5. பருப்பு வகைகள் துவரம் பருப்பு, பாசி பருப்பு என பருப்பு வகைகள் அனைத்திலும் புரதச்சத்து நிறைந்திருக்கிறது