ஆபத்து காலத்தில் ஆக்சிஜனுக்கு அலையாமல்,உடலில் ஆக்சிஜனை உருவாக்கும் ஜூஸ் .

 

ஆபத்து காலத்தில் ஆக்சிஜனுக்கு அலையாமல்,உடலில் ஆக்சிஜனை உருவாக்கும்  ஜூஸ் .

1.தினமும் காலையில் எழுந்த உடன் முதல் உணவாக புரதச்சத்து அதிகம் நிறைந்துள்ள மற்றும் ஆக்ஸிஜன் அதிகம் கிடைக்கக் கூடிய இந்த ஜூஸை குடித்து வரலாம். முந்தைய நாள் இரவே 20 பாதாம் மற்றும் 10 பேரீச்சம் பழங்களை கொட்டை நீக்கி மூழ்கும் அளவிற்கு நல்ல தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதனை காலையில் மிக்சி ஜாரில் போட்டு நன்கு அரைத்து ஜூஸாக்கி வெறும் வயிற்றில் குடித்து வரலாம். வெள்ளை சாதத்தின் அளவை குறைத்துக் கொண்டு, காய்கறிகள் அளவை அதிகரித்துக் கொள்ளுங்கள்.

ஆபத்து காலத்தில் ஆக்சிஜனுக்கு அலையாமல்,உடலில் ஆக்சிஜனை உருவாக்கும்  ஜூஸ் .

2.

கேரட் மற்றும் பீட்ரூட் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி உடலை சுத்தம் செய்ய உதவுகிறது மற்றும் கல்லீரல் ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது. நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால், இது நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதில் சிறந்தது.

இவற்றைக் கொண்டு ஜூஸ் தயாரிக்க, பிளெண்டரில் 2 கேரட், ஒரு பீட்ரூட், 2 நெல்லிக்காய் மற்றும் ஒரு இன்ச் இஞ்சியை நறுக்கிப் போட்டு, ஒரு டம்ளர் நீர் ஊற்றி நன்கு அரைக்க வேண்டும். பின் அதில் சிறிது எலுமிச்சை சாற்றினை சேர்த்தால், ஜூஸ் தயார்.

3.முளைக்கட்டிய தானிய வகைகளை தினமும் ஒன்று என்ற கணக்கில் ஒரு கப் வீதம் சாப்பிட்டு வரலாம். சிகப்பு அவல், கவுனி அரிசி போன்றவற்றை அன்றாட உணவில் ஒரு சிறு அளவிற்கு சேர்த்து வந்தால் உடலுக்கு நல்ல சத்து கிடைக்கும். தினமும் குறைந்தது 4 லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும். இரவு நேரத்தில் அதிக அளவிற்கு திட உணவுகளை எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

சமூக இடைவெளியை கடைபிடித்து, உங்களுக்கும் நம் சமுதாயத்திற்கும் நலன் புரிய முயற்சி செய்ய வேண்டும். தேவையில்லாமல் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். அரசு கொடுக்கும் உத்தரவுகளை தவறாமல் பின்பற்றி வர வேண்டும். வீட்டிலேயே சிறுசிறு மூச்சுப் பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும். தியான நிலையில் அமர்ந்து வலது நாசியை அடைத்துக் கொண்டு இடது நாசியால் 10 முறையும், இடது நாசியை அடைத்துக் கொண்டு வலது நாசியால் 10 முறையும் மூச்சை மெதுவாக இழுத்து வேகமாக வெளியில் விட வேண்டும். இதனால் நுரையீரல் சுருங்கி விரிந்து நல்ல முறையில் இயங்கும். ஆரோக்கிய ரீதியான சிறு அறிகுறி தோன்றினாலும் உடனே அலட்சியப்படுத்தாமல், கால தாமதம் செய்யாமல் மருத்துவரை அணுகுவது நல்லது.