காலையிலே இந்த பாலை குடிச்சா ,எந்த ஜென்மத்திலேயும் கால் வலி வராது

 

காலையிலே இந்த பாலை குடிச்சா ,எந்த ஜென்மத்திலேயும் கால் வலி வராது

இந்த பாலை தயாரிக்க என்னென்ன பொருட்கள் தேவை என்பதை முதலில் நாம் பார்த்து விடுவோம். கேழ்வரகு மாவு – 250 கிராம், கருப்பு எள்ளு – 50 கிராம், சோம்பு – 2 டேபிள்ஸ்பூன், கற்கண்டு – 50 கிராம். – முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து கேழ்வரகு மாவை நன்றாக வறுத்துக் கொள்ள வேண்டும். அதனுடைய பச்சை வாடை போகும் அளவிற்கு வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அடுத்தபடியாக கருப்பு எள்ளை சூடான கடாயில் கொட்டி வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

காலையிலே இந்த பாலை குடிச்சா ,எந்த ஜென்மத்திலேயும் கால் வலி வராது

 மிக்சியில்  வறுத்த எள்ளு, சோம்பு, கற்கண்டு இந்த 3 பொருட்களையும் போட்டு நன்றாக பொடி செய்து, அந்த பொடியை வறுத்த கேழ்வரகு மாவுடன் நன்றாகக் கலந்து, ஒரு கண்ணாடி பாட்டிலில் சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள். –

இந்தப் பொடியை தினசரி எப்படி பாலுடன் கலந்து குடிப்பது? பாலை காய்ச்சி ஒரு டம்ளர் அளவு சூடாக எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு சிறிய கிண்ணத்தில் 1 ஸ்பூன் அளவு நீங்கள் அரைத்த பொடியை சேர்த்து, அதில் 1/4 டம்ளர் தண்ணீரை விட்டு நன்றாக கரைத்துக் கொள்ளுங்கள். இந்த கரைசலை சூடாக இருக்கும் பாலில் ஊற்றி கலந்து அப்படியே குடித்து விடவேண்டியது தான். தினமும் காலையில் காபி டீயை தவிர்த்துவிட்டு இந்த பாலை குடிப்பது நல்லது. சோம்பு வாசம் பிடிக்காதவர்கள் சோப்புக்கு பதிலாக ஏலக்காய்களை சேர்த்துக் கொள்ளலாம். சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இனிப்பே சேர்க்காமலும் இந்த பாலை பருகலாம் என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று. உடலில் இருக்கும் கால்சியம் சத்துக் குறைபாட்டை சீக்கிரமே சரி செய்ய இந்த பால் உதவியாக இருக்கும். .