இதை சட்னி செய்து சாப்பிட்டால் கிட்னி ‘கின்’னுன்னு வேலை செய்யும்

 

இதை சட்னி செய்து சாப்பிட்டால் கிட்னி ‘கின்’னுன்னு வேலை செய்யும்

சிறுநீரகத்தை பாதுகாக்கும் உணவுகள் என்னென்ன தெரியுமா?

பூண்டின் நன்மைகளை சொல்லவே வேண்டாம். இதனை அதிகம் சாப்பிட்டால், இதய நோய் வருவதை தவிர்ப்பதோடு, இது உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை கரைப்பதோடு, உட்காயங்களையும் குறைத்துவிடும்.மேலும்பூண்டை சட்னி செய்து கூட சாப்பிட்டால் கிட்னியை பாதுகாக்கும்.

இதை சட்னி செய்து சாப்பிட்டால் கிட்னி ‘கின்’னுன்னு வேலை செய்யும்

வெங்காயத்தை அதிகம் சாப்பிட்டால், சிறுநீரக கற்களை வருவதை இயற்கையாகவே தடுக்கலாம். மேலும் இது சிறுநீரகத்தை சுத்தமாகவும் வைத்துக் கொள்ளும்.மேலும் வெங்காயத்தையும் அடிக்கடி சட்னி செய்து சாப்பிடலாம்

கீரை வகைகளையும் தவிர்க்காமல் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அவற்றில் நிறைந்திருக்கும் ஆன்டிஆக்சிடெண்ட், வைட்டமின், தாதுக்கள் போன்றவை சிறுநீரகங்களின் ஆரோக்கியத்திற்கு உதவும். மேலும் அனைத்து கீரை வகைகளையும் ,கடைந்தோ அல்லது துவையல், சட்னி போல செய்தோ சாப்பிடலாம்

காலையில் தேநீர் பருகினால்தான் பெரும்பாலானோருக்கு சோம்பல் நீங்கி புத்துணர்வு ஏற்படும். தலைவலியை போக்கும் பானமாகவும் நிறைய பேர் கருதுகிறார்கள். சிறுநீரகங்களை சுத்தப்படுத்தவும் தேநீர் உதவுகிறது. தினமும் ஒரு கப் தேநீர் பருகுவது சிறுநீரகங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். குப்பைமேனி இலை, துளசி போன்ற மூலிகைகளை கொண்டு தேநீர் தயாரித்து பருகுவது நல்லது.

செர்ரி பழ வகைகளை சாப்பிட்டு வருவதும் சிறுநீரக ஆரோக்கியத்திற்கு வலு சேர்க்கும். தொடர்ந்து இரண்டு வாரங்கள் செர்ரி மற்றும் கிரான்பெர்ரி பழங்களை சாப்பிட்டு வருவதன் மூலம் சிறுநீரக பாதையில் ஏற்படும் நோய் தொற்று குறைய தொடங்கும். இதனை உலர்ந்த பழமாகவும் உட்கொள்ளலாம். சாலட்டுகளாக தயார் செய்தும் சாப்பிடலாம். இதில் இருக்கும் ஆன்டி ஆக்சிடெண்டுகள் பல்வேறு நோய் பாதிப்புகளில் இருந்து உடலை தற்காத்துக்கொள்ள வழிவகை செய்யும்.

எலுமிச்சை, ஆரஞ்சு, முலாம் பழங்களில் சிட்ரிக் அமிலம் நிறைந்துள்ளது. அதனை ஜூஸாக பருகிவந்தால் சிறுநீரகத்தில் கலந்திருக்கும் நச்சுக்கள் வெளியேறும். சிறுநீரக கற்கள் படியாமலும் பாதுகாக்கலாம். இவற்றில் ஏதாவது ஒரு ஜூஸை தினமும் பருகுவது நல்லது. உப்போ, சர்க்கரையோ சேர்க்காமல் பருக வேண்டும்.