Home லைப்ஸ்டைல் ஆரோக்கியம் இதயத்துக்கு பெரிய ஆப்பு வைக்கும் ,தினமும் நாம் செய்யும் இந்த சின்ன தப்பு.

இதயத்துக்கு பெரிய ஆப்பு வைக்கும் ,தினமும் நாம் செய்யும் இந்த சின்ன தப்பு.

ஆரோக்கியமான இதயம் ஆரோக்கியமான மனதுக்கும் உடலுக்கும் ஒரு திறவுகோலாகும். உலகில் தினமும் 2500-க்கும் மேற்பட்டோர் இருதய பிரச்சினைகளால் பாதிக்கப்படுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. சிறு வயதிலிருந்தே வலுவான இதயத்தைப் பராமரிப்பது உங்கள் வயதைக் காட்டிலும் நீங்கள் சிறப்பாக வாழ உதவும்.நீங்கள் நீண்ட, சுறுசுறுப்பான வாழ்க்கையை அனுபவிக்க திட்டமிட்டால், உங்கள் இதயத்தை நல்ல நிலையில் வைத்திருக்க வேண்டும். நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் உடல் இயக்கம் மற்றும் ஆற்றலை எரிக்கிறது. எனவே உங்கள் இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கும் செயல்கள் மற்றும் உணவு முறைகளுக்கு ஏற்றவாறு உங்கள் வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்வது உங்கள் ஆயுளை அதிகரிக்கும். இதயத்துக்கு பெரிய ஆப்பு வைக்கும் ,தினமும் நாம் செய்யும் இந்த சின்ன தப்பு.

இதயத்துக்கு பெரிய ஆப்பு வைக்கும் ,தினமும் நாம் செய்யும் இந்த சின்ன தப்பு.

பற்களைப் பாதுகாக்க மறந்துவிடுதல்

பல் ஆரோக்கியமும், இதய ஆரோக்கியமும் ஒன்றோடு ஒன்று தொடர்புள்ளவை. பல்வேறு ஆராய்ச்சி முடிவுகளின் படி, பல் பராமரிப்பு சரியாக இல்லாதவர்களுக்கும், ஈறுகளில் வீக்கம் உள்ளவர்களுக்கும், இதய நோய் வரும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்று சொல்கிறது. அதிலும் பல் ஈறுகளில் நீண்ட காலமாக வீக்கம் உள்ளவர்களுக்கு, அந்த வீக்கத்திலிருந்து பாக்டீரியாக்கள் வெளியேறி இரத்தத்தில் கலந்து விடுகின்றனவாம். மேலும் பற்களையும், பல் இடுக்குகளையும் முறையாக சுத்தம் செய்து, பற்களைப் பாதுகாப்புடன் பேணிவருபவர்களுக்கு ஆரோக்கியமான பற்கள் அமைவதோடு, ஆரோக்கியமான இதயமும் அமையும். அத்தகையவர்களுக்கு இதயம் தொடர்பான நோய்கள் வரும் வாய்ப்பும் குறைவாகவே இருக்கும்.

போதுமான அளவு பால் பொருட்களை உண்ணாதிருத்தல்

சமீபத்திய ஒரு ஆராய்ச்சியில் மாதவிலக்கு முடிவுற்ற (postmenopausal women) 82,000 பெண்களது வாழ்க்கை முறையானது 8 ஆண்டுகளாக ஆராயப்பட்டது. அதில் அதிகமான அளவு பால் பொருட்களை எடுத்துக் கொண்ட பெண்கள், பால் பொருட்களைக் குறைந்த அளவு உட்கொண்ட பெண்களை விட, 50% குறைவான அளவிலேயே இரண்டாம் வகை சர்க்கரை நோய் (type 2 diabetes) தாக்கும் அபாயத்தைப் பெற்றிருந்தார்கள். உடலுக்கு கலோரிகளைக் குறைக்கும் நோக்கத்திலும், கொழுப்புகளைக் குறைக்கும் எண்ணத்திலும், பால் பொருட்களைக் குறைத்துக் கொண்டால், அது இதயத்திற்கு நல்லதல்ல.

பீன்ஸைத் தவிர்த்தல்

கருப்பு பீன்ஸ், கிட்னி பீன்ஸ் மற்றும் இதர வகை பீன்ஸ்களில் புரதச்சத்து மிகுந்துள்ளது. இவற்றில் நிறைவுற்ற கொழுப்புகள் இல்லை. மேலும் கொலஸ்ட்ராலைக் குறைக்கும் தன்மை கொண்ட, கரையக்கூடிய நார்ச்சத்துக்களும் நிறைந்துள்ளன. ஓட்ஸ் மற்றும் பார்லியிலும் கூட, இந்த கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன. ஏனெனில் இவைகளில் இரத்தக்குழாய்களில் உள்ள கொலஸ்ட்ராலை நீக்கும் சக்தியானது உள்ளது.

உற்சாக பானங்களை அருந்துதல்

ஆற்றல் தரும், கார்பன்-டை-ஆக்ஸைடு நிரப்பிய உற்சாக பானங்களில், சர்க்கரை சேர்க்கப்பட்டுள்ளதால், இவை இரத்தத்தில் ட்ரை கிளிசரைடு அளவு உயர்வதற்கு காரணமாக உள்ளன. ட்ரை கிளிசரைடுகள் என்பவை ஒருவகை கொழுப்புகள். இவை இரத்தத்தின் பாகுத்தன்மையைக் கூட்டும் தன்மை கொண்டவை. ஏற்கனவே கொலஸ்ட்ரால் இருந்தால், அதன் காரணமாக இரத்தக்குழாய்களில் அடைப்புகள் உண்டாகும். அதோடு இந்த ட்ரை கிளிசரைடுகளால் இரத்தத்தின் கெட்டித்தன்மை அதிகரிக்கப்பட்டு, இரத்தமானது பாய்ந்தால், இரத்த ஓட்டத்திலும், இரத்த அழுத்தத்திலும் பாதிப்பு ஏற்படும். எனவே தாகம் ஏற்பட்டால், இது போன்ற உற்சாக பானங்களைத் தவிர்த்துவிட்டு, தண்ணீர், எலுமிச்சை ஜூஸ், சாத்துக்குடி ஜூஸ் அல்லது வேறு பழச்சாறுகளை அருந்துவது நல்லது. மேலும் கரும்புச்சாறு கூட தாகத்தைத் தவிர்ப்பதோடு, ஆற்றல் தரத்தக்கதாகும்.

இதயத்துக்கு பெரிய ஆப்பு வைக்கும் ,தினமும் நாம் செய்யும் இந்த சின்ன தப்பு.
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

“இது பழிவாங்கும் நடவடிக்கையின் முதல் கட்டம்” – எம்.ஆர்.விஜயபாஸ்கர் பகிரங்க குற்றச்சாட்டு!

லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்தியது அதிமுகவை திமுக அரசு பழிவாங்கும் நடவடிக்கையின் முதல் கட்டம் என அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

எம்.ஜி.ஆர். பங்களா – மீட்க போராடும் வாரிசுகள்

தமிழ்நாட்டின் மையப்பகுதி திருச்சி என்பதால் தலைமைச் செயலகத்தை திருச்சிக்கு மாற்றி விடலாமா என்று ஆலோசனை மேற்கொண்டார் அன்றைய முதல்வர் எம்ஜிஆர். அதன் தொடர்ச்சியாக திருச்சியில் தனக்கு ஒரு வீடு இருக்க...

புதிய நீர் சேமிப்பு கட்டுமானங்களை அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

நீராதாரங்களை அதிகரிக்க புதிய நீர் நிலைகளில் உருவாக்கிடவும், மழைக்காலத்தில் கிடைக்கும் நீரை முழுமையாக சேமித்த பயன்படுத்தவும் , மாவட்டங்களில் புதிய நீர் சேமிப்பு கட்டுமானங்கள் அமைத்திடவும் , நீர்வளத் துறை...

ஒலிம்பிக் வரலாற்றில் முதன்முறையாக… தாங்களே பதக்கம் அணிவித்துக் கொள்ளும் வீரர்கள்!

உலகமே எதிர்பார்த்துக் காத்துக் கிடந்த ஒலிம்பிக் போட்டியை கொரோனா வைரஸ் முற்றிலுமாக மாற்றியமைத்து விட்டது. கடந்த ஆண்டே நடக்கவிருந்த ஒலிம்பிக் போட்டி கொரோனா பாதிப்பால் இந்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த...
- Advertisment -
TopTamilNews