ஆசையா கொஞ்சுற அளவுக்கு ,உங்க குழந்தைக்கு அறிவும் ,அழகும் கொடுக்கும் மெனு

 

ஆசையா கொஞ்சுற அளவுக்கு ,உங்க குழந்தைக்கு அறிவும் ,அழகும் கொடுக்கும்  மெனு

1. முட்டை

அனைத்து அமினோ அமிலங்கள், புரதம், கொழுப்பு, தாதுக்கள், விட்டமின் ஏ, பி 12 ஆகியவை உள்ளன. குழந்தையின் வளர்ச்சிக்கு உதவும்.

நரம்பு மண்டலம் சீராக வேலை செய்ய, மூளை வளர்ச்சி சீராக இருக்க கொலைன் சத்து உதவும்.

குழந்தைக்கு முட்டை கொடுத்து, அலர்ஜி ஏற்பட்டால் உடனே மருத்துவரிடம் காண்பிக்கவும்.

அலர்ஜி ஏற்படவில்லை என்றால், வாரம் 3 நாள் முட்டை கொடுக்கலாம்.

வேகவைத்த முட்டை, ஸ்க்ராபிள்ட் முட்டை, முட்டை ஆம்லெட், முட்டை சாதம், ஃப்ரெஞ்ச் டோஸ்ட் கொடுக்கலாம்.

ஆசையா கொஞ்சுற அளவுக்கு ,உங்க குழந்தைக்கு அறிவும் ,அழகும் கொடுக்கும்  மெனு

#2. வெண்ணெய்

அதிக கொழுப்பு, அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளன.

பருப்பு, கிச்சடி, கஞ்சி, கூழ், பான்கேக், சூப் ஆகியவற்றில் ஒரு டீஸ்பூன் கொடுக்கலாம். அதற்கு மேல் தரகூடாது.

அதிகமாக வெண்ணெயை எடுத்துக்கொள்ள கூடாது.

#3. மீன்

புரதம், விட்டமின் டி, ஓமேகா 3 ஃபேட்டி ஆசிட் நிறைந்துள்ளன.

மூளை வளர்ச்சிக்கு உதவும்.

விட்டமின் சி சத்து கிடைக்கும்.

அலர்ஜி இல்லையென்றால் 10 -11 மாத குழந்தை முதலே மீன் கொடுக்கலாம்.

குழம்பு மீன் தருவது நல்லது. மீனை பொரிக்க வேண்டாம்.

#4. பால்

பசும்பால் கிடைத்தால் தினமும் ஒரு டம்ளர் பசும் பால் தருவது நல்லது. எருமைப்பால் தவிர்த்துவிடுங்கள்.

பாலாக குடிக்க பிடிக்கவில்லை என்றால் விட்டுவிடுங்கள். குழந்தைகளை கட்டாயப்படுத்திக் கொடுக்க வேண்டாம்.

ராகி, கீரைகள், எள்ளு, ஆரஞ்சு, கொய்யா, உருளை, அத்தி, பாதாம், நட்ஸ், கொண்டைக்கடலை ஆகியவற்றிலிருந்து குழந்தைகளுக்கு கால்சியம் கிடைக்கும்

#5. சீஸ்

பிரெட் டோஸ்ட், கட்லெட், பான்கேக், கேக், சாண்ட்விச், ஃபிங்கர் ஃபுட் இவற்றில் சீஸ் சேர்த்து குழந்தைகளுக்கு தரலாம்.

#6. நட்ஸ் மற்றும் விதைகள்

குழந்தைகள் மென்று சாப்பிட பழகி இருந்தால் மட்டுமே நட்ஸ் தரலாம். 3 வயதுக்கு மேல் நட்ஸ் தரலாம்.

பாதாம், முந்திரி, உலர்திராட்சை, பிஸ்தா, ஆப்ரிகாட், வால்நட், பூசணி விதைகள், வெள்ளரி விதைகள், சூரியகாந்தி விதைகள் ஆகியவைத் தரலாம்.

#7. இறைச்சி

சிக்கன், மட்டன் நன்றாக வேகவைத்து காரம் குறைவாக சேர்த்துக் கொடுக்கலாம்.

குழந்தைக்கு தேவையான இரும்புச்சத்துகள் கிடைக்கும்.

சிக்கன் சூப், மட்டன் சூப் கொடுக்கலாம். கொஞ்சமாக சாதத்தில் சிக்கன் கறி, மட்டன் கறி சேர்த்து பிசைந்து கொடுக்கலாம்.