நைட்ல வரும் வறட்டு இருமலை,ஃபைட் பண்ணி விரட்டும் இந்த மூலிகை பொடி.

 

நைட்ல வரும் வறட்டு இருமலை,ஃபைட் பண்ணி விரட்டும் இந்த மூலிகை பொடி.

வசம்பு மற்றும் அதிமதுரம் கொண்டு தயாரிக்கப்படும் மருந்து இருமல், காய்ச்சல் மற்றும் வயிற்று வலிக்கு உதவுகிறது. நீண்ட நாள் மற்றும் வறட்டு இருமல் இருந்தால், வசம்பு மற்றும் அதிமதுரப் பொடியை சிறிது தேனுடன் கலந்து, இரவில் சாப்பிட்டு வர இருமல் வேகமாக குணமடையும்.

நைட்ல வரும் வறட்டு இருமலை,ஃபைட் பண்ணி விரட்டும் இந்த மூலிகை பொடி.
Cough and Cold

அதிமதுரப் பொடியை பாலில் கலந்தும் குடித்து வரலாம். அவ்வாறு குடிக்கும் பொழுது அதிலேயே அதிக அளவிலான இனிப்பு இருப்பதால் தேனோ அல்லது வேறு இனிப்புகளோ பயன்படுத்தத் தேவையில்லை.

மேலும் சில இருமல் டிப்ஸ்:

மஞ்சள் சேர்த்த பால்

ஆயுர்வேத மருத்துவர் இருமலால் பாதிக்கப்படும்போது தினமும் ஒரு தம்ளர் பாலில் கால் டீ ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து குடித்து வாருங்கள் என்கிறார். காலை, இரவு என இரண்டு வேளை ஒரு வாரம் குடித்தால் தொண்டை யில் உள்ள சளி நீங்கி சுத்தமாகும்.

மஞ்சள் பாலுடன் பூண்டு

பாலில் மஞ்சள் சேர்க்கும் போது குழந்தைகளும் குடித்துவிடுவார்கள். எந்தவிதமான நெடியும், வித்தியாச மான வாசனையும் வராது. ஆனால் இந்த மஞ்சள் பாலுடன் பூண்டுப்பல்லைத் தட்டி சேர்த்து வந்தால் நிவார ணம் உடனடியாக கிடைக்கும். தொண்டைக்கும் இதமாக இருக்கும்.

பூண்டின் வாடையை எல்லோரும் விரும்புவதில்லை. அதனால் பூண்டுக்கு மாற்றாக இஞ்சியைத் தோல்நீக்கி மிக்ஸியில் பொடித்து சேர்க்கலாம் சற்று காரம் மிக்க இது எரிச்சலான தொண்டைக்கு இதமாக இருக்கும்.

பொதுவாகவே இருமலால் அவதியுறுபவர்கள் இரவைக் கடப்பதுதான் சிரமமாக இருக்கும். இரவு நேரங்களில் தொடர் இருமலாக இருந்தால் மிதமான வெந்நீரில் கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து தொண்டை வரை தண் ணீர் சென்று வாய்க்கொப்பளிக்கலாம். இதனால் தொண்டையில் இருக்கும் கண்ணுக்குத் தெரியாத கிருமிகள் வெளியேறும்.

மஞ்சளும் பயன்களும்

மஞ்சளில் குர்குமின், ஆன்டி வைரல், ஆன்டி பாக்டீரியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது தொண்டையில் ஏற்படும் தொற்றைப் போக்குகிறது. இஞ்சி மற்றும் பூண்டு இரண்டுமே தொண்டையில் ஏற்படும் புண்களை போக்க பெரிதும் பயன்படுகிறது.

இதை இருமல் அதிகம் இருக்கும் போது தினமும் இரவில் குடித்து வந்தால் தொண்டையில் ஏற்படும் எரிச்சல் நீங்கி இருமல் குறையும். இதிலுள்ள சூடான பால் நெஞ்சில் உள்ள சளியை இளகச் செய்து எளிதாக வெளி யேற்றி விடும்.

அமிர்தவல்லி (சோமவல்லி ஜூஸ்)

உங்களுக்கு தொடர்ச்சியான இருமல் இருந்தால் தினமும் காலையில் 2 டேபிள் ஸ்பூன் அமிர்தவல்லி சாற்றைத் தண்ணீரில் கலந்து குடித்து வந்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும் .

வேலை செய்யும் விதம்

இது உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலில் தோஷம், வாதம் மற்றும் பித்தம் மூன்றையும் சம நிலையில் வைக்கிறது. இந்த பானம் தூசி, புகைக் காற்றால் ஏற்படும் இருமலை நீக்க பெரிதும் பயன்படுகி றது.