Home லைப்ஸ்டைல் ஆரோக்கியம் சரக்கடிக்கலேன்னா கிறுக்கு புடிக்கிறவங்கள, அதை வெறுக்க வைக்க இதை படிங்க .

சரக்கடிக்கலேன்னா கிறுக்கு புடிக்கிறவங்கள, அதை வெறுக்க வைக்க இதை படிங்க .

சரக்கடிக்கலேன்னா கிறுக்கு புடிக்கிறவங்கள, அதை வெறுக்க வைக்க இதை படிங்க .

ஆல்கஹால் அளவை BAC என்பார்கள். அதாவது Blood Alcohol Concentration.  இரத்தத்தில்

ஆல்கஹாலின்BAC 0.03ல் இருந்து 0.12 சதவீதம் இருக்கையில், தான் ஒரு பெரிய பலசாலி, தன்னால் எதுவும் முடியும் என்று ஒரு எண்ணம் வரும். உலகில் எது வந்தாலும் சமாளிக்கும் தைரியம் தன்னிடம் உள்ளது என்று தோன்றும். இந்நிலையில் சரியான முடிவுகள் எதுவும் எடுக்க முடியாது. ஏனெனில், மனதில் முதலில் எது படுகின்றதோ அதுவே சரியானதாகத் தெரியும். அந்தச் சூழ்நிலையில் யாராவது எதாவது சொன்னாலும், அதற்கேற்றவாறே மனம் செயல்படத் தோன்றும்

சரக்கடிக்கலேன்னா கிறுக்கு புடிக்கிறவங்கள, அதை வெறுக்க வைக்க இதை படிங்க .

BAC 0.9ல் இருந்து 0.25 சதவீதம் இருக்கையில், தூக்கம் தூக்கமாக வரும். நினைவுகள் மழுங்கும். சற்று முன் நடந்த நிகழ்வுகள் கூட நினைவில் இருக்காது. வேகமாக இயங்க முடியாது. கையில் இருக்கும் மதுவைத் தடுமாறிக் கொட்டி விட்டு அதனை வெறித்துப் பார்ப்பார்கள். உடல் ஒத்திசையாது. நிலை தடுமாறும். நடக்கையில் உடல் தள்ளாடும். கண் பார்வை மங்கும். கேட்கும் திறன், சுவை உணர்தல், தொடுதல் போன்ற உணர்வுகளில் தடுமாற்றம் அல்லது இல்லாமல் போய் விடும்.

பாதிப்புகள் :

வலிப்பு நோய்

குடிப்பழக்கம் அதிகமாக உள்ளவர்களுக்கு வலிப்பு வரும் என்பது ஒருபுறமிருக்க, இது வரை வலிப்பு நோய் வராதவர்களுக்கு கூட வலிப்பு நோய் வரக் காரணமாகவும் மாறி விடும். மேலும், வலிப்பு நோய் உள்ளவர்கள் சாப்பிட்டு வரும் மருந்துகளின் செயல்பாட்டையும் கூட மது குறைத்து விடுகிறது.

கீல் வாதம்

மூட்டுகளில் யூரிக் ஆசிட் கற்கள் உருவாகும் வலி மிக்க சூழல் தான் கீல் வாதம். எனினும், பரம்பரை வியாதிகள், ஆல்கஹால் மற்றும் பிற உணவு பழக்கங்களும் ஆகியவையும் கூட இந்த கீல் வாதம் வரலாம். மேலும், ஆல்கஹாலும் கீல் வாதத்தை அதிகப்படுத்தி விடும்.

அதிக இரத்த அழுத்தம்

ஆல்கஹால் பரிவு நரம்பு மண்டலத்தை (Sympathetic Nervous System) பாதித்து, இரத்த குழாய்களின் பிற இடங்களை ஒடுக்கவும் மற்றும் நீட்டிக்கவும் செய்து கட்டுப்படுத்துவதால், அதன் விளைவாக மன அழுத்தம், உடல் வெப்பநிலையில் பாதிப்பு, கடுமையான அழுத்தம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். மேலும், அதிகமான மதுப் பழக்கத்தால் இரத்தம் உறைந்து இரத்த அழுத்தம் ஏற்பட்டு, நெடுநாட்களுக்கு தொந்தரவுகள் நீடிக்கும். மேலும், அதிக இரத்த அழுத்தம் காரணமாக சிறுநீரக நோய், இதய நோய் மற்றும் மாரடைப்பு போன்ற நோய்களும் ஏற்படும்.

தொற்று நோய்கள்

மது அதிகம் அருந்துவதால், உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறைக்கப்பட்டு விடுவதால், காசநோய், நிமோனியா, ஹெச்.ஐ.வி மற்றும் பிற பாலியல் தொடர்பான நோய்களின் தாக்குதல்கள் ஏற்படுகின்றன. எனவே அதிகமான குடிப்பழக்கம் உள்ளவர்கள் பாலியல் தொடர்பான நோய்களால் தாக்கப்படும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. சாதாரணமானவர்களை விட, குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு பாலியல் நோய்கள் வர மூன்று மடங்கு அதிகமான வாய்ப்புகள் உள்ளன.

சரக்கடிக்கலேன்னா கிறுக்கு புடிக்கிறவங்கள, அதை வெறுக்க வைக்க இதை படிங்க .
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

நாளை இவர்களுக்கு மட்டும் முழு ஊரடங்கிலிருந்து விலக்கு!

தமிழக முதல்வராக பதவியேற்ற மு.க.ஸ்டாலின் போட்ட முதல் கையெழுத்து கொரோனா நிவாரண நிதிக்கு தான். அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.2,000 இரண்டு தவணையாக வழங்கப்படுமென அறிவித்தார். அதில், முதல் தவணையை...

எனது செயல்பாட்டின் அடிப்படையில் என்னை மதிப்பீடு செய்யுங்கள்! நிதியமைச்சர் பி.டி.ஆர். தியாகராஜன்

தமிழ்நாட்டின் நிதியமைச்சராக பொறுப்பேற்றபின் தன்னை தயாள குணம் கொண்ட வகையில் வாழ்த்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். தியாகராஜன் நன்றி தெரிவித்துள்ளார்.

“90நாட்களில் 5 கோடி தடுப்பூசிகள் வேண்டும்” உலகளாவிய டெண்டர் கோரியது தமிழக அரசு!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தாக்கம் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 18 வயதிலிருந்து 45...

முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ₹25 லட்சம்

தமிழகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலையால், அரசு பெரும் நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது.
- Advertisment -
TopTamilNews