எதிர்காலத்தில் உங்க குழந்தைக்கு ரத்த கொதிப்பு வராமலிருக்க ,நிகழ்காலத்தில் இதை கொடுங்க

 

எதிர்காலத்தில் உங்க குழந்தைக்கு ரத்த கொதிப்பு வராமலிருக்க ,நிகழ்காலத்தில் இதை கொடுங்க

இந்த அதிவேக வாழ்வியல் முறை நமது ஆரோக்கியத்தையும், வாழ்நாளையும் கூட மிக விரைவாக குறைத்து விடுகிறது. கோவம், மன அழுத்தம், பொழுதுபோக்கு, வேலை, ஓய்வே என்று எதுவாக இருந்தாலும் அது கணினியை சார்ந்தே இருப்பது என்ற வாழ்வியல் முறை.

இவை எல்லாமும் ஒரு பக்கம் இரத்த கொதிப்பு அதிகரிக்க வாய்ப்புகளாக அமைகிறது என்று இருப்பினும், சரியான ஊட்டச்சத்து எடுத்துக்கொள்வது இல்லை என்பது தான் முதன்மை காரணியாக இருக்கின்றது.

சமீபத்தில் ஒரு ஆராய்ச்சியின் முடிவில் பொட்டாசியம் சத்தின் குறைபாடு தான் இளைஞர்கள் மத்தியில் இரத்தக் கொதிப்பு அதிகரிக்க காரணமாக இருக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது…..

போஸ்டன் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி

போஸ்டன் மருத்துவ பல்கலைக்கழகத்தில் (Boston University School of Medicine) நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் முடிவில், உப்பின் மிகுதியை விட, பொட்டாசியம் சத்தின் குறைப்பாட்டினால் தான் இன்றைய இளைஞர்களின் மத்தியில் இரத்தக் கொதிப்பு ஏற்பட காரணமாக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

பத்தாண்டு கால ஆராய்ச்சி

இந்த ஆராய்ச்சியில் 9-10 வயதுடைய 2,185 குழந்தைகள் பங்குபெற்று இருந்தனர். கடந்த பத்து ஆண்டுகளாக இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. குழந்தை பருவம் முதல் இளமை பருவம் வரையில் இவர்களது உணவுப் பழக்கத்தை வைத்து ஆராய்ச்சி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பொட்டாசியம்

சத்து இந்த ஆராய்ச்சியில், உணவு முறையில் அதிகமாக பொட்டாசியம் சத்து சேர்த்துக் கொண்டவர்களுக்கு இரத்தக் கொதிப்பு ஏற்படும் சதவீதம் குறைவாக இருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.

பொட்டட்டோ சிப்ஸ், பொட்டட்டோ ப்ரைஸ்… போன்ற உருளைக்கிழங்கு சார்ந்த உணவு பொருளுக்கு நாம் மிக பெரிய அடிமையாக இருக்கின்றோம். ஆனால், உருளை கிழங்கை இப்படி சாப்பிடுவதை காட்டிலும் வேக வைத்து சாப்பிடுவது தான் நல்லது.

ஏனெனில், இதிலுள்ள பொட்டாசியம் அப்போதுதான் அப்படியே நமக்கு கிடைக்கும். அத்துடன் இரும்பு சத்து, வைட்டமின் பி6, சி, நார்சத்து போன்றவையும் சேர்ந்து கிடைக்கும்

170 கிராம் பீட்ரூட்டில் 518 mg அளவு பொட்டாசியம் உள்ளதாம். இந்த அடர் சிவப்பு நிறத்தில் உள்ள பழம் இதய நோய்கள் வரும் அபாயத்தை பெரிதும் குறைக்கிறது.

இதற்கு முழு காரணமும் பீட்ரூட்டில் உள்ள பொட்டாசியம் தான். மேலும், இதில் உள்ள இரும்புசத்து, மாக்னீஸ், ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் போன்றவை சீரான ரத்த ஓட்டத்தை தரும்.

எதிர்காலத்தில் உங்க குழந்தைக்கு ரத்த கொதிப்பு வராமலிருக்க ,நிகழ்காலத்தில் இதை கொடுங்க

பலவித மருத்துவ பயன்கள் இந்த முளைக்கீரையில் உள்ளதாம். முளைக்கீரையை சாப்பிடுவதால் பொட்டாசியம், வைட்டமின் கே, கால்சியம், மாக்னெஸ் ஆகிய சத்துக்கள் கிடைக்கும்.

எனவே, உங்களுக்கு பார்வை குறைபாடு, எலும்புகள் பாதிப்பு, எதிர்ப்பு சக்தி குறைபாடு.. இப்படிப்பட்ட பிரச்சினைகள் எல்லாம் வராதாம்

கலோரிகள்

முன்பு உடல் சார்ந்த வேலைகள் அதிகமாக இருந்ததால் கிலோ கணக்கில் அளவு வைத்து சாப்பிட்டு வந்தோம். ஆனால், இன்று பெரும்பாலும் அனைத்து வேலைகளும் உடல் வேலைகள் மிகவும் குறைந்தே இருக்கின்றது. எனவே, கிலோ கணக்கில் சாப்பிடுவதை தவிர்த்து கலோரிகள் கணக்கில் சாப்பிடுவது தான் இன்றைய வாழ்வியல் முறைக்கு சரியாக இருக்கும் என கூறப்படுகிறது.