‘கழுத்து என்னாச்சோ?’ எனப் பயந்தவங்களுக்கு பெண் கிரிக்கெட்டர் பதில்

 

‘கழுத்து என்னாச்சோ?’ எனப் பயந்தவங்களுக்கு பெண் கிரிக்கெட்டர் பதில்

நேற்று பெண்கள் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி நடந்தது. அதில், சூப்பர் நோவாஸ் அணியும், டிரெயில் ப்ளேஸர்ஸ் அணியும் மோதிக்கொண்டன. சூப்பர் நோவாஸ் அணிக்கு கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், டிரெயில் ப்ளேயர்ஸ் அணியின் கேப்டன் மந்தனா.

முதலில் ஆடிய டிரெயில் ப்ளேஸர்ஸ் டீம் 20 ஓவர் முடிவில் 118 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய சூப்பர் நோவாஸ் அணி கடைசி ஓவர் வரை போராடியது. ஆனால், டிரெயில் ப்ளேஸர்ஸ் அணியின் பவுலர்களில் திறமையான பந்துவீச்சில் 102 ரன்களில் சுருண்டது சூப்பர் நோவாஸ்.

‘கழுத்து என்னாச்சோ?’ எனப் பயந்தவங்களுக்கு பெண் கிரிக்கெட்டர் பதில்

இதனால், முதல் முறையாக மந்தனா தலைமையிலான டிரெயில் ப்ளேஸர்ஸ் அணி கோப்பையை வென்றது.

நேற்றைய போட்டியில், சூப்பர் நோவாஸ் அணி பேட்டிங் பிடிக்கையில் 2 வது ஓவரில் ஜெமின்னாஹ் பந்தை பவுண்ட்ரியை நோக்கித் திருப்பி விட்டார். அங்கே பீல்டிங்கில் இருந்த நட்டகன் சந்தம், அந்தப் பந்தை துரத்தியபடி ஓடினார். பந்து பவுண்ட்ரி லைனை நெருங்கிக்கொண்டிருந்தது. இனி ஓடிச் சென்று பவுண்ட்ரியைத் தடுக்க முடியாது என, பாய்ந்தார். பந்து பவுண்ட்ரி லைனைத் தொடுவதற்கு முன், அவரின் தலை மோதியது… அதற்குள் அவரின் கை பந்து லைனைத் தொடாத மாதிரி மைதானத்திற்குள் தள்ளியது.

‘கழுத்து என்னாச்சோ?’ எனப் பயந்தவங்களுக்கு பெண் கிரிக்கெட்டர் பதில்

நட்டகன் சந்தத்தின் பீல்டிங்கைப் பார்த்தவர்கள் வியந்து பாராட்டினார்கள். இரண்டு ரன்கள் அவரின் அணிக்கு சேமிக்கப்பட்டது.

அவரின் பீல்டிங்கை வியந்தவர்களும்கூட, அவரின் கழுத்தில் ஏதேனும் பிரச்னையாகி இருக்கக்கூடும் என கவலைப்பட்டார்கள். ஆனால், இன்று நட்டகன் சந்தம் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘கழுத்து வலி குறித்து கேட்ட அனைவருக்கும் நன்றி. என் கழுத்தில் தற்போது வலி இல்லை’ என்று கூறியிருக்கிறார்.