தேசிய பாதுகாப்பில் அரசியலை கொண்டுவராதீங்க…1962 போருக்கு அப்புறம் என்ன நடந்தது? காங்கிரசுக்கு குட்டு வைத்த சரத் பவார்

தேசிய பாதுகாப்பில் அரசியலை கொண்டுவராதீங்க…1962 போருக்கு அப்புறம் என்ன நடந்தது? காங்கிரசுக்கு குட்டு வைத்த சரத் பவார்

கடந்த 15ம் தேதியன்று கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன ராணுவத்தினர் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற போது இந்திய வீரர்கள் தடுத்தனர். அப்போது நடந்த இருதரப்பினருக்கும் இடையே நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இந்த சம்பவம் நடந்தது முதல் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி மத்திய அரசை விமர்சனம் செய்து வருகிறது. லடாக்கில் என்ன நடந்தது என்பதை வெளிப்படையாக கூறும்படி மத்திய அரசுக்கு குடைச்சல் கொடுத்து வருகிறது. குறிப்பாக ராகுல் காந்தி, இந்திய நிலப்பகுதியை மோடி சீனாவிடம் சரண்டர் செய்து விட்டார் என ராகுல் காந்தி விமர்சனம் செய்து இருந்தார். இந்த சூழ்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தேசிய பாதுகாப்பு விஷயங்களை அரசியல் படுத்தாதீங்க என காங்கிரசுக்கு குட்டு வைத்துள்ளார்.

தேசிய பாதுகாப்பில் அரசியலை கொண்டுவராதீங்க…1962 போருக்கு அப்புறம் என்ன நடந்தது? காங்கிரசுக்கு குட்டு வைத்த சரத் பவார்

சதாரவில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் செய்தியாளர்கள் மத்தியில் பேசும் போது அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: 1692 யுத்தத்துக்கு பிறகு நமது அண்டை நாடு (சீனா) இப்போது போன்று இந்தியாவின் பெரும் நிலப்பரப்பை உரிமை கோரியது. 1962ல் இந்தியாவின் 45 ஆயிரம் சதுர கி.மீட்டர் நிலப்பரப்பை சீனா ஆக்கிரமிப்பு செய்ததை நாம் மறந்து விடக்கூடாது. இந்த குற்றச்சாட்டுக்களை (சீனாவின் சமீபத்திய ஆக்கிரமிப்பு) முன்வைக்கும்போது, கடந்த காலத்தில் என்ன நடந்தது என்பதையும் ஒருவர் பார்க்க வேண்டும்.

தேசிய பாதுகாப்பில் அரசியலை கொண்டுவராதீங்க…1962 போருக்கு அப்புறம் என்ன நடந்தது? காங்கிரசுக்கு குட்டு வைத்த சரத் பவார்

சீன வீரர்கள் இந்திய மண்ணை ஆக்கிரமிக்க முயற்சி செய்தபோது நம் வீரர்கள் அவர்களை பின்வாங்க செய்ய முயன்றனர். இது யாருடைய அல்லது பாதுகாப்பு அமைச்சரின் தோல்வி என சொல்லது சரியானதல்ல. நமது ராணுவம் எச்சரிக்கையாக இல்லாதிருந்தால், சீனாவின் வலியுறுத்தல் நமக்கு தெரிந்து இருக்காது. இந்தியா-சீனா இடையிலான ஒப்பந்தத்தில் எல்லைகட்டுப்பாட்டு பகுதியில் துப்பாக்கிகளை பயன்படுத்த கூடாது என இரு நாடுகளும் முடிவு செய்துள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார். சரத் பவார் முன்பு பாதுகாப்பு துறை அமைச்சராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.