மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலைய பெயரை அதானி விமான நிலையம் என மாற்றம்.. கொந்தளித்த மகாராஷ்டிரா அமைச்சர்

 

மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலைய பெயரை அதானி விமான நிலையம் என மாற்றம்.. கொந்தளித்த மகாராஷ்டிரா அமைச்சர்

மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலைய பெயரை அதானி விமான நிலையம் என பெயர் மாற்றம் செய்ததை சகித்து கொள்ள முடியாது என்று மகாராஷ்டிரா அமைச்சர் நவாப் மாலிக் தெரிவித்தார்.

மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தை அதானி நிறுவனம் நிர்வகித்து வருகிறது. இந்நிலையில் மும்பை விரைவு சாலையில் விமான நிலையம் அருகில் உள்ள சத்ரபதி சிவாஜி சில அருகில் அதானி விமான நிலையம் என்ற நியான் பெயர் பலகை வைக்கப்பட்டு இருந்தது. சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தை, அதானி விமான நிலையம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தால் கோபம் அடைந்த சிவ சேனா கட்சி தொண்டர்கள் அதானி பெயர் பலகை அடித்து நொறுக்கினர். கடந்த சில தினங்களாக இந்த விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலைய பெயரை அதானி விமான நிலையம் என மாற்றம்.. கொந்தளித்த மகாராஷ்டிரா அமைச்சர்
நவாப் மாலிக்

இந்த சூழ்நிலையில் மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலைய பெயரை அதானி விமான நிலையம் என்று பெயர் மாற்றியதற்கு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மகாராஷ்டிரா அமைச்சரவை அமைச்சருமான நவாப் மாலிக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நவாப் மாலிக் கூறியதாவது: மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தின் பெயர் இந்திய விமான நிலைய ஆணையம் முன்பு வழங்கப்பட்டது. ஜி.வி.கே. நிறுவனம் விமான நிலையத்தால் நிர்வகிக்கப்பட்டது. தற்போது அதானி நிறுவனம் ஜி.வி.கே. பங்குகளை வாங்கியுள்ளது. இதன் மூலம் அதானி நிறுவனம் விமான நிலையத்தின் இணை உரிமையாளர்களாக மாறியுள்ளனர்.

மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலைய பெயரை அதானி விமான நிலையம் என மாற்றம்.. கொந்தளித்த மகாராஷ்டிரா அமைச்சர்
மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையம்

அதனால் அவர்கள் (அதானி) தங்கள் சொந்த பெயருடன் விமான நிலையத்திற்கு பெயரிட வேண்டும் என்று அர்த்தமல்ல. இதற்கு முன் ஜி.வி.கே. நிறுவனம் இப்படி எதுவும் செய்யவில்லை. அதானி நிறுவனத்தின் இந்த நடவடிக்கை மகாராஷ்டிரா மக்களின் உணர்வுகளையும், நாட்டின் உணர்வுகளையும் காயப்படுத்துகிறது. விமான நிலைய ஆணையத்தின் வி.ஐ.பி. கேட் அதானியால் மறுபெயரிடப்பட்டதை பொறுத்துக் கொள்ள முடியாது. இது மக்களின் உணர்வுகளை புண்படுத்தும். எதிர்காலத்தில் சிக்கல்களை தவிர்க்க அவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.