மனசு மாறிய தேசிய மக்கள் கட்சி… மணிப்பூரில் தப்பியது பா.ஜ.க. அரசு… மீண்டும் ஏமாந்த காங்கிரஸ்

 

மனசு மாறிய தேசிய மக்கள் கட்சி… மணிப்பூரில் தப்பியது பா.ஜ.க. அரசு… மீண்டும் ஏமாந்த காங்கிரஸ்

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் தற்போது முதல்வர் பைரன் சிங் தலைமையிலான பா.ஜ.க. அரசு ஆட்சி செய்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் மணிப்பூர் அரசியல் பரபரப்பாக உள்ளது. அன்று இரவு பா.ஜ.க.வை சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்கள் யாரும் எதிர்பாராத வண்ணம் காங்கிரசுக்கு தாவினர். மேலும் பா.ஜ.க. அரசில் அங்கம் வகித்த தேசிய மக்கள் கட்சியின் 4 அமைச்சர்கள், திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. மற்றும் சுயேட்சை எம்.எல்.ஏ. ஆகியோர் பா.ஜ.க.வுக்கு கொடுத்த ஆதரவை திரும்ப பெற்றனர். இதனால் பா.ஜ.க. அரசு கவிழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

மனசு மாறிய தேசிய மக்கள் கட்சி… மணிப்பூரில் தப்பியது பா.ஜ.க. அரசு… மீண்டும் ஏமாந்த காங்கிரஸ்இந்த சூழ்நிலையில் மணிப்பூர் அரசியலில் புதிய திருப்பமாக எதிர்கட்சியான காங்கிரஸை சேர்ந்த தலைவர்கள், இதர கட்சிகள் அடங்கிய பிரதிநிதிகள் அடங்கிய குழு அம்மாநில கவர்னர் நஜ்மா ஹெப்துல்லாவை சந்தித்தனர். அப்போது, தற்போது காங்கிரஸ் சட்டமன்ற கட்சித்தலைவராக இருக்கும் ஓக்ரம் இபோபி சிங் தலைமையில் ஆட்சியமைக்க கோரியும், பா.ஜ.க. அரசின் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வர சட்டப்பேரைவையில் சிறப்பு கூட்டத்தை நடத்தக்கோரியும் கவர்னரிடம் கோரிக்கை விடுத்தனர்.

மனசு மாறிய தேசிய மக்கள் கட்சி… மணிப்பூரில் தப்பியது பா.ஜ.க. அரசு… மீண்டும் ஏமாந்த காங்கிரஸ்

இதனால் மணிப்பூரில் பா.ஜ.க. ஆட்சியை இழந்து விடும் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கிடையே கடந்த வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற மணிப்பூர் ராஜ்யசபா இடத்துக்கான தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்று ஆச்சரியம் அளித்தது. இந்நிலையில் நேற்று திடீர் திருப்பமாக பா.ஜ.க.வுக்கு தொடர்ந்து ஆதரவு அளிப்போம் என தேசிய மக்கள் கட்சி அறிவித்தது.

மனசு மாறிய தேசிய மக்கள் கட்சி… மணிப்பூரில் தப்பியது பா.ஜ.க. அரசு… மீண்டும் ஏமாந்த காங்கிரஸ்தேசிய மக்கள் கட்சி தலைவர் சங்மா கான்ராட் மற்றும் மணிப்பூர் துணை முதல்வர் ஜாய் குமார் சிங் தலைமையிலான குழு நேற்று பா.ஜ.க. தலைவர் ஜே.பி. நட்டா மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்தித்து பேசிய பிறகுதான் மணிப்பூரில் பா.ஜ.க.வுக்கு தொடர்ந்து ஆதரவு அளிப்போம் என அந்த கட்சி தெரிவித்துள்ளது. எப்படியும் இந்த முறை ஆட்சியை பிடித்து விடலாம் என்று இருந்த காங்கிரசுக்கு இது பெரும் ஏமாற்றமாக அமைந்தது.