தேசியக் கொடி அவமதிப்பு வழக்கு… முன்ஜாமீன் மனுத் தாக்கல் செய்த எஸ்.வி.சேகர்!

 

தேசியக் கொடி அவமதிப்பு வழக்கு… முன்ஜாமீன் மனுத் தாக்கல் செய்த எஸ்.வி.சேகர்!

தேசியக் கொடியை அவமரியாதை செய்தது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் எஸ்.வி.சேகர் முன்ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்துள்ளார்.தேசியக் கொடியை மதத்துடன் இணைத்து எஸ்.வி.சேகர் பேசியிருந்தார். அதில் இருந்து காவி நிறத்தை அகற்றிவிடலாமா என்ற வகையில் அவர் பேசியது தேசியக் கொடியை அவமரியாதை செய்தது என்று கூறி சென்னை போலீசில் புகார் செய்யப்பட்டது. தீவிர விசாரணைக்குப் பிறகு எஸ்.வி.சேகர் மீது வழக்குப் பதிவு செய்வது என்று சென்னை போலீஸ் முடிவுக்கு வந்தது. ஆனால், இது குறித்து எஸ்.வி.சேகரிடம் நேரில் விசாரணை நடத்தியதாக தெரியவில்லை.

தேசியக் கொடி அவமதிப்பு வழக்கு… முன்ஜாமீன் மனுத் தாக்கல் செய்த எஸ்.வி.சேகர்!


இதற்கிடையே தேசியக் கொடியை அவமரியாதை செய்த வழக்கில் தான் கைது செய்யப்படலாம் என்று கருதும் எஸ்.வி.சேகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு வருகிற திங்கட்கிழமை நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்னிலையில் விசாரணைக்கு வருகிறது.
தேசியக் கொடியை உயிரினும் மேலாக மதிப்பவன். அதை அவமானம் செய்ய கனவிலும் நினைத்தது இல்லை என்று எஸ்.வி.சேகர் குரல் தழுதழுக்கப் பேசி வீடியோ வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.