“நாட்டியாஞ்சலி பள்ளிகள் 2 ஆயிரம் ரூபாயை நன்கொடை தாருங்கள்” : நடராஜர் கோவில் தீட்சிதர் அனுப்பிய மெசேஜால் சர்ச்சை!

“நாட்டியாஞ்சலி பள்ளிகள் 2 ஆயிரம் ரூபாயை நன்கொடை தாருங்கள்” : நடராஜர் கோவில் தீட்சிதர் அனுப்பிய மெசேஜால் சர்ச்சை!

உலக பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் வருகிற 19ஆம் தேதி, ஆனித்திருமஞ்சன விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.

இந்நிலையில் நடராஜர் கோவில் தீட்சிதர் ஐயப்பன் என்பவர் நாட்டியாஞ்சலி பள்ளிகளில் பணம் கேட்டு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். அதில், நாட்டியாஞ்சலி பள்ளிகள் 2 ஆயிரம் ரூபாயை நன்கொடையாக கோயிலுக்கு வழங்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

“நாட்டியாஞ்சலி பள்ளிகள் 2 ஆயிரம் ரூபாயை நன்கொடை தாருங்கள்” : நடராஜர் கோவில் தீட்சிதர் அனுப்பிய மெசேஜால் சர்ச்சை!

இவர் ஏற்கனவே 10 ஆயிரம் பேரை வைத்து நாட்டியாஞ்சலி நடத்தி பல லட்சம் ரூபாயை மோசடி செய்ததாக தெரிகிறது. தற்போது நாட்டியாஞ்சலி பள்ளிகளிடம் நன்கொடை கேட்டிருப்பது மற்ற தீட்சிதர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“நாட்டியாஞ்சலி பள்ளிகள் 2 ஆயிரம் ரூபாயை நன்கொடை தாருங்கள்” : நடராஜர் கோவில் தீட்சிதர் அனுப்பிய மெசேஜால் சர்ச்சை!

முன்னதாக சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் ஸ்டாண்டர்டு ஃபயர் ஒர்க்ஸ் அதிபர் ராஜரத்தினம் மகள் சிவகாமி திருமணம் நடைபெற்ற நிலையில் பட்டு தீட்சிதர் பணிநீக்கம் செய்யப்பட்டார். அதேபோல் அர்ச்சகர் தர்ஷன் லதா என்ற பெண்ணை கன்னத்தில் அறைந்த காரணத்திற்காக கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.