“மிஸ் யூ விவேக் சார்” – கிரிக்கெட் வீரர் நடராஜன் உருக்கம்!

 

“மிஸ் யூ விவேக் சார்” – கிரிக்கெட் வீரர் நடராஜன் உருக்கம்!

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத கலைஞன் விவேக் இன்று மறைந்தார். நகைச்சவை நடிகர், கவிஞர், எழுத்தாளர், குணச்சித்திர நடிகர் என பன்முக திறமைகளைக் கொண்டவர். திரைப்படங்களில் தனக்குக் கிடைத்த நகைச்சுவை கதாபாத்திர வாய்ப்பை மிகச் சரியாகப் பயன்படுத்தி மூட நம்பிக்கைக்கு எதிரான விழிப்புணர்வு வசனங்களைத் தூவிச் சென்றவர் இன்று கண்மூடி விட்டார்.

“மிஸ் யூ விவேக் சார்” – கிரிக்கெட் வீரர் நடராஜன் உருக்கம்!

விவேக்கின் மறைவுக்குப் பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்துகின்றனர். வருண் சக்கரவர்த்தி, ஹர்பஜன் சிங் ஆகியோர் ஏற்கெனவே இரங்கல் தெரிவித்திருந்தனர்.

தற்போது தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரரான நடராஜன் தங்கராசு ட்விட்டரில் இரங்கல் தெரிவித்திருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில், உங்கள் ஆன்மா அமைதியாக இளைப்பாறட்டும் என்றும் உங்களை நாங்கள் மிஸ் செய்வோம் என்றும் உருக்கமாகக் குறிப்பிட்டிருக்கிறார்.