அறிமுகத்தில் சாதனை: முதல் ‘இந்தியர்’ நடராஜனை பாராட்டிய ஐசிசி!

 

அறிமுகத்தில் சாதனை: முதல் ‘இந்தியர்’ நடராஜனை பாராட்டிய ஐசிசி!

ஒரு நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொடரின் அனைத்துப் பிரிவுகளிலும் (ஒருநாள், டி20, டெஸ்ட்) அறிமுகமான முதல் இந்தியர் என்ற சாதனையைப் படைத்த நடராஜனுக்கு ஐசிசி பாராட்டு தெரிவித்துள்ளது.

வாய்ப்புகள் எந்த வழியிலாவது வரலாம். அப்படி வரும் வாய்ப்புகளை யார் சரியாகப் பயன்படுத்திக்கொள்கிறார்களோ அவர்களுக்கே வெற்றி தேடிவரும். அப்படி தான் தனக்கு வந்த வாய்ப்பை கெட்டியாகப் பிடித்து மேலே ஏறிக்கொண்டிருக்கிறார் சின்னப்பம்பட்டி நடராஜன்.

அறிமுகத்தில் சாதனை: முதல் ‘இந்தியர்’ நடராஜனை பாராட்டிய ஐசிசி!

2017 ஐபிஎல் தொடரில் சொல்லிக்கொள்ளும்படியான விலைக்கு ஏலம் போயிருந்தாலும் அவருக்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. இச்சூழலில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்காகக் களமிறங்கினார். அவர் களமிறங்கிய சமயம் அணியின் மெயின் பவுலர் புவனேஸ்வர் குமார் காயம் காரணமாக விலக பின்னடைவு ஏற்பட்டது.

அவர் இல்லாமல் எப்படி டெத் ஓவர்களை சரிகட்ட போகிறோம் என்ற கவலை கொண்டிருந்த அணி நிர்வாகத்துக்கும் தனது யார்க்கர்களால் சிக்னல் கொடுத்தார் நடராஜன். அது அவருக்கு நல்ல பலனைக் கொடுத்தது.

அவரது பந்து பேட்டிங் அசுரன் டிவில்லியர்ஸை தூக்கிய மொமெண்ட் தான் ஐபிஎல்-13 சீசனின் பெஸ்ட் மொமெண்ட். அந்தப் பந்தின் வேகமும் துல்லியமும் டிவில்லியர்ஸையே ஒரு கணம் திக்குமுக்காட வைத்தது. அதன்பின், தனக்கு மிகவும் பிடித்த தோனியின் விக்கெட்டை தூக்குவதுதான் ஆசை என்று கூறிய அடுத்த சில நாட்களிலேயே அவரது விக்கெட்டையும் காலி செய்து பிசிசிஐயின் கடைக்கண் பார்வையைத் தன் மேல் விழச் செய்தார்.

அறிமுகத்தில் சாதனை: முதல் ‘இந்தியர்’ நடராஜனை பாராட்டிய ஐசிசி!

ஐபிஎல் முடிந்த கையோடு ஆஸ்திரேலிய தொடருக்கான அணிகள் அறிவிக்கப்பட்டன. அந்த சமயத்தில் வருண் சக்கரவர்த்தி காயம் காரணமாக விலக அணியில் இணைந்தார் நடராஜன். ஆனால் நெட் பவுலராக. அவரை மெயின் பவுலராக எதிர்பார்த்தவர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றம் தான்.

முதல் இரு ஒருநாள் போட்டிகளிலும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. தொடரைப் பறிகொடுத்த பின் வாய்ப்பு கடைசி போட்டியில் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இது ஒரு மோசமான அறிமுகம் தான். இருப்பினும், மனம் தளராமல் ஆஸ்திரேலியாவின் பில்லர் லபுசானேவின் விக்கெட்டை தூக்கி ஆச்சரியப்பட வைத்தார் நடராஜன்.

அறிமுகத்தில் சாதனை: முதல் ‘இந்தியர்’ நடராஜனை பாராட்டிய ஐசிசி!

அதன்பின், டி20 தொடரில் அசத்தலான பவுலிங்கால் இந்தியா தொடரை வெல்ல அவரும் ஒரு காரணமாக அமைந்தார். ஹர்திக் பாண்டியாவுக்கு தொடர் நாயகன் கொடுக்க, அவரோ இதற்குத் தகுதியானவர் நடராஜன் தான் என்று கூறி அவரிடம் விருதைக் கொடுத்து அனைவரது மனதையும் கொள்ளை கொண்டார். தொடர்ந்து வென்ற கோப்பையை விராட் கோலி நடராஜன் கையில் கொடுக்க, அது நடராஜனின் பெருமைமிகு தருணங்களாக அமைந்தன.

அறிமுகத்தில் சாதனை: முதல் ‘இந்தியர்’ நடராஜனை பாராட்டிய ஐசிசி!

இச்சூழலில், ஆஸ்திரேலியா உடனான டெஸ்ட் போட்டிக்கு வீரர்கள் தயாராகிக் கொண்டிருந்தனர். லிமிடெட் ஓவர் போட்டிகளிலேயே அதிகமாக விளையாடியதால் டெஸ்ட் தொடரில் நடராஜன் ஓரங்கெட்டப்பட்டார். வார்ம்அப் போட்டிகளில் கூட வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. ரெட் பால் கிரிக்கெட்டில் அவர் அந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்த மாட்டார் என அவரது ஐபிஎல் கேப்டன் வார்னர் உட்பட அனைவரும் கூறினர்.

இதைக் காரணத்தால் அணி நிர்வாகமும் நடராஜனை களமிறக்க தயங்கியது. இச்சூழலில் பெரும்பாலான பவுலர்கள் காயம் காரணமாக அடுத்தடுத்த போட்டிகளில் வெளியேற சைனி, சிராஜ் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. நடராஜன் நெட் பவுலராகவே தொடர்ந்தார்.

அறிமுகத்தில் சாதனை: முதல் ‘இந்தியர்’ நடராஜனை பாராட்டிய ஐசிசி!

இச்சூழலில் தான் அணியிலிருந்த ஒரே மெயின் பவுலர் பும்ரா காயம் காரணமாக விலகினார். இதனால் தான் வேறு வழியில்லாமல் நடராஜன் கடைசி போட்டியில் களமிறக்கப்பட்டார். ஒருநாள் தொடரைப் போலவே இதுவும் ஒரு மோசமான அறிமுகமாக அவருக்கு அமைந்தது. “வாய்ப்பு எப்படி வந்தா என்ன, அத எனக்கு சாதகமா மாத்தி காமிப்பேன்” என மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார்.

முதல் விக்கெட்டாக மேத்யூ வேடின் விக்கெட்டை வீழ்த்தினாலும், நீண்ட நேரமாக குடைச்சல் கொடுத்து சதமடித்த லபுசானேவின் விக்கெட்டை தூக்கி அனைவரின் பாராட்டையும் பெற்றிருக்கிறார் நடராஜன். போட்டியின் முதல் நாளிலேயே லீடிங் விக்கெட் டேக்கராக இருக்கிறார். இன்னும் ஆட்டத்தில் எஞ்சிய நாட்களில் என்ன சாதனை செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி நிற்கிறது.

டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் 300ஆவது வீரராகக் களமிறங்கி நடராஜன் ஒரு சாதனை புரிந்துள்ளார். அதனை ஐசிசி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு பாராட்டியுள்ளது. முழு தொடருக்கும் (ஒருநாள், டி20, டெஸ்ட்) ஒரு நெட் பவுலராக சுற்றுப்பயணம் மேற்கொண்ட வீரர் அந்தத் தொடரின் அனைத்துப் பிரிவுகளிலும் அறிமுகமான முதல் இந்திய வீரர் என்ற பெருமையை நடராஜன் பெற்றிருக்கிறார்.