நாங்க காதலுக்கு எதிரானவர்கள் அல்ல.. ஜிஹாத்துக்கு எதிரானவர்கள்.. பா.ஜ.க. அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா

 

நாங்க காதலுக்கு எதிரானவர்கள் அல்ல.. ஜிஹாத்துக்கு எதிரானவர்கள்.. பா.ஜ.க. அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா

நாங்க காதலுக்கு எதிரானவர்கள் அல்ல ஆனால் ஜிஹாத்துக்கு எதிரானவர்கள் அல்ல என்று மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா தெரிவித்தார்.

மத்திய பிரதேச உள்துறை அமைச்சரும், பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவருமான நரோட்டம் மிஸ்ரா அதிரடியாக பேசக் கூடியவர். அவரது பல்வேறு கருத்துகள் பரபரப்பை ஏற்படுத்த கூடியதாக இருக்கும். மேற்கு வங்கத்தில் பா.ஜ.க. தனது கட்சியின் பல்வேறு தலைவர்களை பிரசாரத்தில் களம் இறக்கி வருகிறது. தற்போது நரோட்டம் மிஸ்ராவையும் மேற்கு வங்க பா.ஜ.க. களம் இறக்கியுள்ளது.

நாங்க காதலுக்கு எதிரானவர்கள் அல்ல.. ஜிஹாத்துக்கு எதிரானவர்கள்.. பா.ஜ.க. அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா
லவ் ஜிஹாத்

மேற்கு வங்கம் அசன்சோலில் அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: லவ் எனது மகளையும், சகோதரியையும் பாதுகாப்பாக ஆக்கும். காதல் பெயரில் அவர்களை ஏமாற்ற வேண்டாம். நாங்கள் காதலுக்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால் ஜிஹாத்துக்கு எதிரானவர்கள். லவ் ஜிஹாத் பாதையை நோக்கி அவர்களை (பெண்களை) அழைத்து செல்லும் எவரையும் நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம்.

நாங்க காதலுக்கு எதிரானவர்கள் அல்ல.. ஜிஹாத்துக்கு எதிரானவர்கள்.. பா.ஜ.க. அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா
பிரதமர் மோடி

எதிர்வரும் மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில், பா.ஜ.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், மாநிலத்தில் லவ் ஜிஹாத்துக்கு எதிராக சட்டம் கொண்டு வாருங்கள் என்று முதல்வரிடம் நான் கோரிக்கை விடுப்பேன். பிரதமர் நரேந்திர மோடி தலைமையின்கீழ், நாட்டில் பணவீக்கம் குறையும் மற்றும் புதிய உயரங்களை இந்தியா தொடும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.