அவரு தனது சித்தாப்பா அல்லது அப்பா பேச்சையே கேட்க மாட்டார்… அகிலேஷ் யாதவை தாக்கிய நரோட்டம் மிஸ்ரா..

 

அவரு தனது சித்தாப்பா அல்லது அப்பா பேச்சையே கேட்க மாட்டார்… அகிலேஷ் யாதவை தாக்கிய நரோட்டம் மிஸ்ரா..

அகிலேஷ் யாதவ் தனது சித்தாப்பா அல்லது அப்பா பேச்சையே கேட்க மாட்டார், அப்புறம் ஏன் நாட்டின் பேச்சை மட்டும் கேட்பார்?

கொரோனா வைரஸ் தடுப்பூசி விரைவில் பயன்பாட்டுக்கு வரும் அனைவரும் எதிர்பார்க்கும் வேளையில், சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ்,பா.ஜ.க. அரசு நம்பிக்கைக்குரியது அல்ல என்பதால் நான் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசியை செலுத்தி கொள்ள மாட்டேன். இந்த நேரத்தில் கோவிட்-19 தடுப்பூசியை எடுத்துக் கொள்ள மாட்டேன். அதிலும் பா.ஜ.க. அரசு அளிக்கும் தடுப்பூசியை. பா.ஜ.க அரசின் தடுப்பூசியை என்னால் எப்படி நம்ப முடியும். வாய்ப்பே இல்லை?. எனது அரசு ஆட்சி அமைக்கும்போது எல்லோரும் இலவசமாக தடுப்பூசியை பெறுவார்கள். நாங்கள் பா.ஜ.க. அரசின் தடுப்பூசியை எடுத்துக்கொள்ள மாட்டோம் என்று தெரிவித்தார்.

அவரு தனது சித்தாப்பா அல்லது அப்பா பேச்சையே கேட்க மாட்டார்… அகிலேஷ் யாதவை தாக்கிய நரோட்டம் மிஸ்ரா..
நரோட்டம் மிஸ்ரா

இதற்கு மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ராவும் அகிலேஷ் யாதவுக்கு பதிலடி கொடுத்துள்ளார். நரோட்டம் மிஸ்ரா இது தொடர்பாக கூறியதாவது: நாம் அவரை (அகிலேஷ் யாதவ்) ஒரு தவறனா இளைஞன் என்று கூட அழைக்க முடியாது. அவர் தனது சித்தாப்பா அல்லது அப்பா பேச்சை கூட ஒரு போதும் கேட்டது கிடையாது. அவர் ஏன் நாட்டை பேச்சை கேட்பார்?. இது சமாதானப்படுத்தும் கொள்கை. தடுப்பூசி தொடர்பாக வதந்திகள் பரப்புவது நல்லதல்ல. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அவரு தனது சித்தாப்பா அல்லது அப்பா பேச்சையே கேட்க மாட்டார்… அகிலேஷ் யாதவை தாக்கிய நரோட்டம் மிஸ்ரா..
சசி தரூர்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சசி தரூர் கூறுகையில், கோவாக்சினுக்கு இன்னும் 3ம் கட்ட சோதனைகள் நடைபெறவில்லை. ஆனால் முன்கூட்டியே ஒப்புதல் வழங்கப்பட்டது ஆபத்தானது. ஹர்ஷ்வர்தன் தயவு செய்து தெளிவுப்படுத்த வேண்டும். முழு சோதனைகள் முடியும் வரை அதனை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அதேசமயம் நம் நாட்டில் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியுடன் தொடங்கலாம் என்று தெரிவித்தார். அதேசமயம் காங்கிரஸ் கட்சியின் மற்றொரு தலைவர், காங்கிரசுக்கு அறிவியல் சமூகம் மற்றும் விஞ்ஞானிகள் மீது முழு நம்பிக்கை உள்ளது என்று தெரிவித்தார்.