உங்களுக்கு என்ன வேண்டுமோ கேளுங்க.. ஆனால் அதை மட்டும் கேட்காதீங்க… விவசாயிகளிடம் அமைச்சர் வலியுறுத்தல்

உங்களுக்கு என்ன வேண்டுமோ கேளுங்க.. ஆனால் அதை மட்டும் கேட்காதீங்க… விவசாயிகளிடம் அமைச்சர் வலியுறுத்தல்

வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்பதை தவிர்த்து, உங்களுக்கு என்ன வேண்டுமோ அரசிடம் கேட்கலாம் என்று விவசாயிகளிடம் மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமல் வலியுறுத்தியுள்ளார்.

மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: ஜனவரி 19ம் தேதி நடைபெறும் அடுத்த கட்ட சந்திப்பின்போது விவசாயிகள் வேளாண் சட்டங்களை பிரிவு வாரியாக விவாதிக்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்பதை தவிர நீங்கள் (விவசாயிகள்) விரும்புவதை அரசிடம் கேட்க வேண்டும்.

உங்களுக்கு என்ன வேண்டுமோ கேளுங்க.. ஆனால் அதை மட்டும் கேட்காதீங்க… விவசாயிகளிடம் அமைச்சர் வலியுறுத்தல்
நரேந்திர சிங் தோமர்

பெரும்பாலான விவசாயிகள் மற்றும் நிபுணர்கள் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக உள்ளனர். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு பிறகு வேளாண் சட்டங்களை அமல்படுத்த முடியாது. விவசாயி சங்கங்களுக்கு நாங்கள் ஒரு பரிந்துரையை அனுப்பியிருந்தோம். அதில், மண்டிகள், வர்த்தகர்கள் பதிவு மற்றும் இதர விஷயங்கள் தொடர்பாக அவர்களின் அச்சங்களை நிவர்த்தி செய்ய ஒப்புக்கொண்டோம்.

உங்களுக்கு என்ன வேண்டுமோ கேளுங்க.. ஆனால் அதை மட்டும் கேட்காதீங்க… விவசாயிகளிடம் அமைச்சர் வலியுறுத்தல்
விவசாயிகள் போராட்டம் (கோப்புப்படம்)

பயிர் கழிவு எரிப்பு மற்றும் மின்சாரம் தொடர்பான சட்டங்களை பற்றி விவாதிக்க அரசாங்கம் ஒப்புக்கொண்டது. ஆனால் விவசாயி சங்கங்கள் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய விரும்புகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார். நாளை நடைபெறும் விவசாயிகள்-மத்திய அரசின் சந்திப்பில் வேளாண் சட்டங்கள் விவகாரத்தில் ஒரு முடிவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.