பிரச்னைகளை சுமுகமான முறையில் எழுப்ப வேண்டும்- பிரதமர் மோடி

 

பிரச்னைகளை சுமுகமான முறையில் எழுப்ப வேண்டும்- பிரதமர் மோடி

நாளை நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதை முன்னிட்டு அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது.

பிரச்னைகளை சுமுகமான முறையில் எழுப்ப வேண்டும்- பிரதமர் மோடி

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை முதல் ஆகஸ்ட் 13 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதனையொட்டி நாடாளுமன்ற வளாகத்தில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளும், சுகாதார ஏற்பாடுகளும் நடைபெற்றுவருகின்றன. கூட்டத்தொடர் காலை 11 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது குறித்து மோடி தலைமையில் அனைத்து கட்சிக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட 33 கட்சிகளை சேர்ந்த 40 எம்பிக்கள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் பங்கேற்ற பின் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “நாடாளுமன்ற கூட்டத்தில் அனைத்து பிரச்னைகள் குறித்தும் ஆக்கப்பூர்வமாக விவாதம் நடைபெறும் என எதிர்பார்க்கிறேன். நாடாளுமன்றத்தில் மக்கள் தொடர்பான பிரச்னைகள் சுமுகமான முறையில் எழுப்பப்பட வேண்டும். விவாதங்களுக்கு பதிலளிக்க அரசுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். மக்கள் பிரதிநிதிகள் உண்மையான களநிலவரத்தை அறிய வேண்டும். இரு அவைகளிலும் அர்த்தமுள்ள விவாதங்கள் நடைபெற வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்