மோடி பதவியேற்ற மே-26 ஆம் தேதியை தேசிய கறுப்புநாளாக கடைபிடிப்போம்- திருமாவளவன்

 

மோடி பதவியேற்ற மே-26 ஆம் தேதியை தேசிய கறுப்புநாளாக கடைபிடிப்போம்- திருமாவளவன்

மோடி பதவியேற்ற மே-26 ஆம் நாளை, விவசாயிகள் விடுத்துள்ள கோரிக்கையை ஏற்று ‘தேசிய கறுப்பு நாளாக’ கடைபிடிக்க வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

மோடி பதவியேற்ற மே-26 ஆம் தேதியை தேசிய கறுப்புநாளாக கடைபிடிப்போம்- திருமாவளவன்

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2014 ஆம் ஆண்டு மே 26 ஆம் தேதிதான் மோடி பிரதமராக பதவியேற்றுக்கொண்டார். இப்போது அவர் அப்பதவியில் 7 ஆண்டுளை நிறைவு செய்துள்ளார். கடந்த 7 ஆண்டுகளில் அவரது ஆட்சியில் இந்தியாவின் பொருளாதாரம் அதலபாதாளத்துக்கு சென்றுவிட்டது. பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்பட்டுள்ளன. பணமதிப்பு அழிப்பு நடவடிக்கையின் மூலமாக ஏழை- எளிய மக்கள் சொல்லொண்ணா துயரத்திற்கு ஆளானார்கள்.

எல்லா தளங்களிலும் தோல்வி அடைந்து விட்ட மோடி அரசு, ஒரு மக்கள் விரோத அரசு. அதை உலகுக்கு எடுத்துக்காட்டும் வகையில் மோடி பதவியேற்ற மே-26 ஆம் நாளை, விவசாயிகள் விடுத்துள்ள கோரிக்கையை ஏற்று ‘தேசிய கறுப்பு நாளாகக்’ கடைபிடிக்க வேண்டும். மோடி அரசு கொண்டுவந்த விவசாயிகளுக்கு எதிரான மூன்று சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி கடந்த 6 மாதங்களாக தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கும் 40க்கும் மேற்பட்ட விவசாய அமைப்புகள் மே.26 ஆம் தேதியை கறுப்பு நாளாகக் கடைபிடிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.