ஊழலுக்கு எதிரான அரசு பாஜக- பிரதமர் மோடி

 

ஊழலுக்கு எதிரான அரசு பாஜக- பிரதமர் மோடி

ஆண்டுதோறும் அக். 27 முதல் நவ. 2 வரை கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் அனுசரிக்கப்படுகிறது, இதனையடுத்து மத்திய புலனாய்வுப் பிரிவு ஏற்பாட்டில் லஞ்ச ஒழிப்பு – ஊழல் தடுப்பு குறித்த தேசிய மாநாடு நடைபெற்றுவருகிறது. இதில் ஊழல் தடுப்பு கண்காணிப்பு அதிகாரிகள், மத்திய புலனாய்வு பிரிவு உள்ளிட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். ‘விழிப்பான இந்தியா – வளமான இந்தியா’ என்ற கருப்பொருளுடனான மாநாட்டை காணொலி வாயிலாக பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்.

ஊழலுக்கு எதிரான அரசு பாஜக- பிரதமர் மோடி

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “நமது நிர்வாக நடைமுறை வெளிப்படையாகவும் மக்களுக்குப் பதிலளிக்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும். ஊழல் என்பது வளர்ச்சிக்கு தடையாக இருப்பது மட்டுமின்றி சமூக சமநிலையையும் வெகுவாக பாதிக்கிறது. ஊழலுக்கு எதிராக எந்தவிதமான சமரசமும் இன்றி இந்த அரசு முன்னேறிக் கொண்டிருக்கிறது. ஊழல் அந்நிய செலாவணி முறைகேடு பொருளாதார குற்றங்கள், போதைப்பொருள் கடத்தல் அமைப்பு இவை எல்லாம் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது. ஊழலுக்கு எதிராக முறையான தணிக்கை பயிற்சி பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது” எனக் கூறினார்.