மாணவர்களுக்கு பிரதமர் மோடியின் சூப்பர் அட்வைஸ்!

 

மாணவர்களுக்கு பிரதமர் மோடியின் சூப்பர் அட்வைஸ்!

பொதுத்தேர்வுகளை கண்டு அச்சம் அடைய வேண்டாம் என மாணவர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.

பரிக் ஷா பே சர்ச்சா எனப்படும் ‘தேர்வுகள் பிரச்னை அல்ல’ என்ற தலைப்பில் பள்ளி கல்லுாரி மாணவர்களுடன் பிரதமர் மோடி கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் கலந்துரையாடி வருகிறார். கொரோனா பரவலால் நடப்பு ஆண்டுக்கான மாணவர்களுடனான கலந்துரையாடல் ஆன்லைன் மூலம் நடைபெற்றது. இதில் பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்கள் மற்றும் அவர்களது ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட 14 லட்சம் பேர் கலந்துகொண்டனர்.

மாணவர்களுக்கு பிரதமர் மோடியின் சூப்பர் அட்வைஸ்!

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “பொதுத்தேர்வுகளை அச்சமின்றி துணிவுடன் மாணவர்கள் எதிர்கொள்ள வேண்டும். பெற்றோர்கள் தங்கள் வேலைகளில் கவனம் செலுத்திவிட்டு குழந்தைகளை கவனிக்க தவறிவிடுகின்றனர்.மாணவர்களுக்கு பெற்றோர்கள் உறுதுணையாக இருந்தால்தான் அவர்களின் தன்னம்பிக்கை வளரும். பொதுத்தேர்வு ஒன்றும் வாழ்க்கையின் இறுதி கட்டமில்லை. மாணவர்களுக்கு ஆசிரியர்கள் தூண்டுகோலாக இருக்க வேண்டும், பெற்றோர்களும் ஆசிரியர்களும் மாணாவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துகின்றனர். மன அழுத்தமின்றி தேர்வை எதிர்கொள்ளுங்கள்” என அறிவுறுத்தினார்.

.