உலக மக்களின் உயிரை காப்பாற்றிய இந்தியா: பிரதமர் மோடி

 

உலக மக்களின் உயிரை காப்பாற்றிய இந்தியா: பிரதமர் மோடி

உலக பொருளாதார மன்றத்தின் டாவோஸ் மாநாட்டில் கலந்துகொண்டுள்ள பிரதமர் மோடி, மனிதகுல நன்மைக்காக தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, 4வது தொழில் புரட்சியை உருவாக்குவது குறித்து உரையாற்றினார். பின்னர், தொழில் நிறுவன தலைவர்களுடன், பிரதமர் கலந்துரையாடுகிறார்.

அப்போது உரையாற்றிய பிரதமர் மோடி, “பல்வேறு நாடுகளுக்கு தடுப்பூசியை வழங்கியதன் மூலம் உலகில் உள்ள பலரின் உயிரை இந்தியா காப்பாற்றியுள்ளது. இந்தியா பெறுகின்ற ஒவ்வொரு வெற்றியும், உலகம் வெற்றி பெற உதவியாக இருக்கும்.கொரோனாவால் இந்தியாதான் அதிகம் பாதிக்கும் என பல்வேறு நிபுணர்கள் கணித்தனர் ஆனால் இன்று மிகப்பெரிய பேரிடரில் இருந்து மனித உயிர்களை இந்தியா காப்பாற்றியுள்ளது.

உலக மக்களின் உயிரை காப்பாற்றிய இந்தியா: பிரதமர் மோடி

150 நாடுகளுக்கு அத்தியாவசிய மருந்துகளை அனுப்பி வைத்துள்ளோம். கொரோனா தடுப்பூசிகளை அனுப்பி வைத்து பல நாடுகளில் லட்சக்கணக்கான உயிர்கள் மடிவதை இந்தியா காத்துள்ளது. இந்தியாவில் 12 நாட்களில் 2.3 மில்லியன் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. சில மாதங்களில் 300 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும். இந்தியாவில் தற்போது 2 கொரோனா தடுப்பூசிகள் தயாரிக்கப்படுகின்றன. மேலும் அதிக தடுப்பூசிகள் இந்தியாவில் உருவாக்கப்படும்.இந்தியா பெறுகின்ற ஒவ்வொரு வெற்றியும் உலகம் வெற்றிப்பெற உதவியாக இருக்கும்” எனக் கூறினார்.