புலம்பெயர் தொழிலாளர்கள் வெளியேற வேண்டாம்- பிரதமர் மோடி

 

புலம்பெயர் தொழிலாளர்கள் வெளியேற வேண்டாம்- பிரதமர் மோடி

நாடு முழுவதும் கொரோனா அதிகரித்துவரும் நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக 2 நாட்களாக பிரதமர் மோடி பல்வேறு துறையினருடன் ஆலோசனை நடத்தினார். இதனை தொடர்ந்து நாட்டுமக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி, “உலகிலேயே மிகக்குறைந்த விலையில் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி கிடைக்கிறது. ஆக்ஸிஜன் தேவையை பூர்த்தி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம். தற்போதைய கொரோனா பாதிப்பிலிருந்து நம்மால் மீண்டு வர முடியும். இதுவரை 12 கோடிக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

புலம்பெயர் தொழிலாளர்கள் வெளியேற வேண்டாம்- பிரதமர் மோடி

முன்களப்பணியாளர்கள், மூத்த குடிமக்கள் பெரும்பாலானோருக்கு தடுப்பூசி கிடைத்துவிட்டது. பொருளாதாரம் பாதிக்கப்படாத வகையில் நமது நடவடிக்கைகள் இருக்க வேண்டும். 50% தடுப்பூசிகள் மாநிலங்களுக்கு நேரடியாக வழங்கப்படுகின்றன. கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வரவே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. புலம்பெயர் தொழிலாளர்கள் தற்போது உள்ள இடங்களிலேயே நீடிக்க மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.