கொரோனா வைரஸ் நாட்டுக்கு மிகப்பெரிய சவால்- மோடி

 

கொரோனா வைரஸ் நாட்டுக்கு மிகப்பெரிய சவால்- மோடி

நாடு முழுவதும் கொரோனா அதிகரித்துவரும் நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக 2 நாட்களாக பிரதமர் மோடி பல்வேறு துறையினருடன் ஆலோசனை நடத்தினார். இதனை தொடர்ந்து நாட்டுமக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி, “இந்தியா மீண்டும் கொரோனாவுக்கு எதிராக போராடிவருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்த அனைவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்.

கொரோனா வைரஸ் நாட்டுக்கு மிகப்பெரிய சவால்- மோடி

மத்திய, மாநில அரசுகளும் மக்களும் இணைந்து சவால்களை எதிர்கொள்ள வேண்டும், மருந்துகளின் உற்பத்தியும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் தொடக்கத்தில் இருந்ததைவிட தற்போது மருந்து தயாரிப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.நம் நாட்டில் மிகப்பெரிய மருந்து நிறுவனங்கள் உள்ளன. எனவே கவலை தேவையில்லை. மருந்து நிறுவனங்களுடன் உற்பத்தியை அதிகரிக்க தொடர்ந்து பேசிவருகிறேன்.குறுகிய காலத்தில் மிக அதிக மருந்து உற்பத்தியை உறுதி செய்திருக்கிறோம்.கொரோனாவுக்கு எதிராக போராடிவரும் சுகாதார பணியாளர்களுக்கு வாழ்த்துக்கள், கொரோனா வைரஸ்க்கு எதிரான போரில் நாம் வெற்றிப்பெறுவோம்.நமது பொறுமையை இழந்துவிடக்கூடாது” எனக்கூறினார்.