அடுத்த பிரதமர் யார்?…. மீண்டும் மோடியை கை காட்டும் மக்கள்.. கருத்து கணிப்பில் தகவல்

 

அடுத்த பிரதமர் யார்?…. மீண்டும் மோடியை கை காட்டும் மக்கள்.. கருத்து கணிப்பில் தகவல்

தொடர்ந்து 2வது முறையாக பிரதமர் மோடி தலைமையில் மத்தியில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. அடுத்த நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் 4 ஆண்டுகள் உள்ளது. இந்த சூழ்நிலையில் இந்தியா டூடே மற்றும் கார்வி இன்சைட் நிறுவனமும் இணைந்து தேசத்தின் மனநிலை என்ற கருத்து கணிப்பு வாக்கெடுப்பை நடத்தியது. அதில் அடுத்த பிரதமராக யார் வரும் என்று விரும்புகிறீர்கள்?, மத்திய அமைச்சர்களில் யார் சிறப்பாக செயல்படுகிறார்கள்?, மாநில முதல்வர்களில் யார் சிறப்பாக செயல்படுகிறார்கள்? என்ற கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தது.

அடுத்த பிரதமர் யார்?…. மீண்டும் மோடியை கை காட்டும் மக்கள்.. கருத்து கணிப்பில் தகவல்

இந்த வாக்கெடுப்பில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலானவர்கள், அடுத்தும் பிரதமராக மோடிதான் வர வேண்டும் விருப்பம் தெரிவித்துள்ளார்கள். அதேசமயம் ராகுல் காந்தி, சோனியா காந்திக்கு பத்து சதவீதம் பேர் கூட ஆதரவு தெரிவிக்கவில்லை. மேலும், அமித் ஷா, யோகி ஆதித்யநாத் மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரும் அடுத்த பிரதமருக்கான மக்களின் தேர்வு பட்டியலில் முதல் 5 இடங்களில் உள்ளனர்.
அடுத்த பிரதமர்
நரேந்திர மோடி- 66 சதவீதம்
ராகுல் காந்தி- 8 சதவீதம்
சோனியா காந்தி- 5 சதவீதம்
அமித் ஷா- 4 சதவீதம்
யோகி ஆதித்யநாத்- 3 சதவீதம்
அரவிந்த் கெஜ்ரிவால்- 3 சதவீதம்

அடுத்த பிரதமர் யார்?…. மீண்டும் மோடியை கை காட்டும் மக்கள்.. கருத்து கணிப்பில் தகவல்

நம் நாட்டின் சிறந்த முதல்வராக உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை 24 சதவீதம் பேர் தேர்வு செய்துள்ளனர். தொடர்ந்து 3வது முறையாக டெல்லி முதல்வராக இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 15 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
சிறந்த முதல்வர்
யோகி ஆதித்யநாத்- 24 சதவீதம்
அரவிந்த் கெஜ்ரிவால்- 15 சதவீதம்
ஜெகன் மோகன் ரெட்டி- 9 சதவீதம்
மம்தா பானர்ஜி- 9 சதவீதம்
நிதிஷ் குமார்- 7 சதவீதம்
உத்தவ் தாக்கரே- 7 சதவீதம்