அரசியலுக்காக எல்லாவற்றையும் எதிர்க்கிறார்கள், பயம் மற்றும் தவறான தகவல்களை பரப்புகிறார்கள்… பிரதமர் மோடி

அரசியலுக்காக எல்லாவற்றையும் எதிர்க்கிறார்கள், பயம் மற்றும் தவறான தகவல்களை பரப்புகிறார்கள்… பிரதமர் மோடி

எதிர்கட்சிகள் அரசியலுக்காக எல்லாவற்றையும் எதிர்க்கிறார்கள், பயத்தையும் தவறான தகவல்களையும் பரப்புகிறார்கள் என்று பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்.

பீகாரில் 2ம் கட்டமாக நாளை நடைபெற உள்ள சட்டப்பேரவை தொகுதிகளில் நேற்றுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்தது. மேற்கு சம்பரன் பகுதியில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில் கூறியதாவது: எதிர்க்கட்சிகள் பொய்கள் மற்றும் தவறான தகல்வகளை பரப்புகின்றன. அவர்கள் எங்கு சென்றாலும் அப்பாவி முகத்துடன் பொய்களை பரப்புகிறார்கள். சுயசார்பு பீகாரை வடிவமைப்பதில் சம்பரன் முக்கிய பங்காற்றும். இது பாபு மற்றும் ஜெயபிரகாஷ் நாராயணனின் புகழ் பெற்ற வரலாற்றைக் கொண்டுள்ளது.

அரசியலுக்காக எல்லாவற்றையும் எதிர்க்கிறார்கள், பயம் மற்றும் தவறான தகவல்களை பரப்புகிறார்கள்… பிரதமர் மோடி
வாஜ்பாய்

நிதிஷ் குமாரும் ஒரு பகுதியாக இருந்த வாஜ்பாய் அரசாங்கம் தரு பழங்குடியினரின் வளர்ச்சிக்கு உதவியது. தற்போது ராமர் கோயில் கட்டுமான பணிகள் தொடங்கி விட்டது, ராமரின் இருப்பை கேள்விக்குள்ளாக்கியவர்களை மறந்து விடாதீர்கள். அவர்களிடம் தகவல் இல்லை. அவர்களிடம் எந்த தர்க்கமும் இல்லை. அவர்கள் அரசியலுக்காக எல்லாவற்றையும் எதிர்க்க விரும்புகிறார்கள். அவர்கள் பயத்தையும் தவறான தகவலையும் பரப்புகிறார்கள்.

அரசியலுக்காக எல்லாவற்றையும் எதிர்க்கிறார்கள், பயம் மற்றும் தவறான தகவல்களை பரப்புகிறார்கள்… பிரதமர் மோடி
ராமர் கோயில் மாதிரி

தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கம் எஸ்.சி./எஸ்.டி. இடஒதுக்கீட்டை அகற்றும் என்று கூறினார்கள். ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கம் இடஒதுக்கீட்டை 10 ஆண்டுகளாக நீட்டித்தது. ஒரு காலத்தில் பீகாரில் கார் ஷோரூமிலிருந்து ஒரு புதிய காருடன் வெளியே வருபவர்கள் பயப்படுவார்கள். ஏனென்றால் அவர்கள் கொள்ளையடிக்கப்படுவார்கள் என்று அவர்களுக்கு தெரியும். மக்கள் வீட்டின் முன்புறத்த சரிசெய்யவில்லை. பீகார் மக்கள் அந்த நாட்களை மறக்கவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.