“உங்கள் முடிவு தவறானது; மாற்றிக்கொள்ளுங்கள் ஆளுநரே” – தமிழிசையை விமர்சித்த நாராயணசாமி!

 

“உங்கள் முடிவு தவறானது; மாற்றிக்கொள்ளுங்கள் ஆளுநரே” – தமிழிசையை விமர்சித்த நாராயணசாமி!

கேரளாவில் ஓணம் திருவிழாவுக்குப் பின் அதிகரித்துள்ள கொரோனா தொற்றை சுட்டிக்காட்டி, மற்ற மாநிலங்கள் திருவிழாக்களில் அதிக தளர்வுகளை அளிக்காமல் கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் இதுதொடர்பாக கடிதமும் அனுப்பப்பட்டது. தனிமனித இடைவெளியையும் முக கவசம் அணிந்து வெளியே செல்ல அறிவுறுத்த வேண்டும், மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளையும், கட்டுப்பாடுகளையும் விரைந்து அதிகப்படுத்துமாறு குறிப்பிடப்பட்டிருந்தது.

“உங்கள் முடிவு தவறானது; மாற்றிக்கொள்ளுங்கள் ஆளுநரே” – தமிழிசையை விமர்சித்த நாராயணசாமி!

மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி மகாராஷ்டிரா, தமிழ்நாடு மாநில அரசுகள் விநாயகர் சதுர்த்தியில் தெருவில் விநாயகர் சிலை வைக்க தடை விதித்துள்ளன. ஆனால் அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்த பாஜகவினர் இதனைக் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். திமுக அரசைக் குத்திக்காட்டும் வகையில் பேசிய ஆளுநர் தமிழிசை, “நான் தொடர்புடைய இரு மாநிலங்களிலும் விநாயகர் சிலை வைப்பதற்கு எந்தத் தடையும் இல்லை. மக்கள் விழிப்புடன் இறைவனை வழிபடும்போது ஏன் தடை விதிக்க வேண்டும்?” என்று பேசியிருந்தார்.

“உங்கள் முடிவு தவறானது; மாற்றிக்கொள்ளுங்கள் ஆளுநரே” – தமிழிசையை விமர்சித்த நாராயணசாமி!

இதனை விமர்சித்துள்ள முன்னாள் முதலைமைச்சர் நாராயணசாமி, “கொரோனா மூன்றாவது அலை பரவும் என எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்கலாம். விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடலாம் என ஆளுநர் அறிவித்துள்ளார். இது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு அரசைப் போலவே புதுச்சேரியிலும் இதற்குத் தடை விதிக்க வேண்டும். ஆளுநர் தனது அறிவிப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில் முதல்வர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.