புதுச்சேரியில் இன்னும் 10 நாட்களில் கொரோனா தடுப்பூசி கிடைக்கும்- முதல்வர் நாராயணசாமி

 

புதுச்சேரியில் இன்னும் 10 நாட்களில் கொரோனா தடுப்பூசி கிடைக்கும்- முதல்வர் நாராயணசாமி

கோவாக்சின் மருந்தின் மூன்றாம் கட்ட பரிசோதனை புதுச்சேரி அரசு இந்திராகாந்தி மருத்துவக்கல்லூரியில் நடைபெற்று வருவதாக அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் நாராயணசாமி, “புதுச்சேரி மாநிலத்தில் உள்ள மக்கள் தொகையில் 33 சதவீதம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு மருந்துகளை பாதுகாக்க புதுச்சேரி மாநிலத்தில் 55 இடங்களை தயார் செய்து இருப்பதாகவும். கோவாக்சின் தடுப்பு மருந்தின் மூன்றாம் கட்ட பரிசோதனை புதுச்சேரி இந்திராகாந்தி மருத்துவக்கல்லூரியில் நடைபெற்றுவருகிறது. கோவாக்சின் மருந்தின் விலையை குறைத்து கொடுக்க வேண்டும் என அந்த நிறுவனத்திடம் கேட்டு இருக்கிறோம்.

புதுச்சேரியில் இன்னும் 10 நாட்களில் கொரோனா தடுப்பூசி கிடைக்கும்- முதல்வர் நாராயணசாமி

இன்னும் 10 தினங்களில் தடுப்பு மருந்து கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. கொரோனா தடுப்பு மருந்தை நாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும் இலவசமாக வழங்கவேண்டும். அப்படி மத்திய அரசு இலவசமாக கொடுத்தால் வாங்குவோம் இல்லையெனில் மாநில நிதியில் இருந்து வாங்குவோம்” எனக் கூறினார்.