அவசரமாக நடைபெற்ற ஆலோசனைக்கூட்டம்; ஆனா எந்த முடிவும் எடுக்கல- நாராயணசாமி

 

அவசரமாக நடைபெற்ற ஆலோசனைக்கூட்டம்; ஆனா எந்த முடிவும் எடுக்கல- நாராயணசாமி

புதுச்சேரியில் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் முதல்வர் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ்- திமுக கூட்டணி கட்சிகளின் எம்.எல்.ஏக்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் மாநில தலைவர் ஏவி சுப்பிரமணியன், அமைச்சர்கள் கமலக்கண்ணன், கந்தசாமி, ஷாஜகான், எம்பி வைத்திலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். புதுச்சேரியில் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ்- திமுக கூட்டணி அரசு பெரும்பான்மை இழந்துள்ளதால் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளது.

அவசரமாக நடைபெற்ற ஆலோசனைக்கூட்டம்; ஆனா எந்த முடிவும் எடுக்கல- நாராயணசாமி

புதுச்சேரியில் அடுத்தடுத்து 6 எம்.எல்.ஏ.க்கள் தனது பதவியை ராஜினாமா செய்ததால், காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமாவை தொடர்ந்து, கூட்டணி எம்.எல்.ஏக்களுடன் நாராயணசாமி ஆலோசனை நடத்தினார். எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனைக்கு பின், செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி, “நடைபெறவிருக்கின்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் திமுக- காங்கிரஸ் கூட்டணிக்கு ஆட்சிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன் உத்தரவிட்டத்தின் படி, நாளை காலை 10 மணிக்கு சட்டப்பேரவை கூடும். அப்போது கூட்டணி கட்சி எந்த நிலையை எடுக்கும் என்பது தெரியும். சட்டப்பேரவை தொடங்கும் முன் எந்த நிலையை எடுக்க வேண்டுமென முடிவு எடுக்கப்படும். இப்போது அது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினோம். ஆனால் ஆலோசனை கூட்டத்தில் எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை. எங்களுடைய நிலைபாடு சட்டமன்றத்தில் வெளிபடும்” என தெரிவித்தார்.