அமிதாப் மற்றும் அக்ஷய் குமாரை பார்த்தால் கருப்புக்கொடி காட்டுவோம்.. மீண்டும் பிரச்சினையை கிளப்பும் காங்கிரஸ்

அமிதாப் மற்றும் அக்ஷய் குமாரை பார்த்தால் கருப்புக்கொடி காட்டுவோம்.. மீண்டும் பிரச்சினையை கிளப்பும் காங்கிரஸ்

அமிதாப் பச்சன் மற்றும் அக்ஷய் குமாரை பார்க்கும் போதெல்லாம் கருப்புக்கொடி காட்டுவோம் என்று மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் நானா படோல் தெரிவித்தது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வுக்கு எதிராக குரல் கொடுக்காத அமிதாப் பச்சன் மற்றும் அக்ஷய் குமாரின் படப்பிடிப்புகள் மற்றும் படங்களை வெளியிடுவதை நிறுத்துவோம் என்று மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் நானா படோல் மிரட்டல் விடுத்தார். ஆனால், காங்கிரஸ் தலைமை செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா, அமிதாப் அல்லது அக்ஷய் குமாரின் பட சூட்டிங்கை அல்லது பட வெளியிட்டை காங்கிரஸ் தொண்டர்கள் தடுக்க (நிறுத்த) மாட்டார்கள் என்று கூறினார். இதனால் பிரச்சினை முடிவுக்கு வந்தது என்று கருதிய நிலையில், அக்ஷய் மற்றும் அமிதாப்புக்கு கருப்புக்கொடி காட்டுவோம் என்று நானா படோல் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

அமிதாப் மற்றும் அக்ஷய் குமாரை பார்த்தால் கருப்புக்கொடி காட்டுவோம்.. மீண்டும் பிரச்சினையை கிளப்பும் காங்கிரஸ்
காங்கிரஸ்

மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் நானா படோல் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: அக்ஷய் குமார் மற்றும் அமிதாப் பச்சனுக்கு எதிராக நான் பேசமாட்டேன் ஆனால் அவர்களின் வேலைக்கு எதிராக பேசுவேன். அவர்கள் உண்மையான கதாநாயகன்கள் இல்லை. அவர்கள் உண்மையில் ஹீரோக்களாக இருந்திருந்தால், மக்கள் துன்பப்படும்போது அவர்களின் (மக்கள்) அருகில் நின்று இருப்பார்கள்.

அமிதாப் மற்றும் அக்ஷய் குமாரை பார்த்தால் கருப்புக்கொடி காட்டுவோம்.. மீண்டும் பிரச்சினையை கிளப்பும் காங்கிரஸ்
நானா படோல்

அவர்கள் தொடர்ந்து காகித புலியாக இருக்க விரும்பினால் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. நாங்கள் பின்வாங்கவில்லை. அவர்களின் படங்கள் வெளியாகும் போதெல்லாம் அல்லது அவர்கள் எங்கள் கண்ணில் படும் போதெல்லாம் அவர்களுக்கு கருப்பு கொடிகளை காண்பிப்போம். நாங்கள் ஜனநாயக வழிகளை பின்பற்றுவோம். நாங்கள் கோட்சே ஆட்கள் அல்ல காந்தி ஆட்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார். இதனையடுத்து அம்மாநில அரசு அமிதாப் பச்சன் வீட்டில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது. ஆக, பாலிவுட் நடிகர்களுடான காங்கிரஸ் கட்சியின் மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளது.