சைனஸ் பிரச்சினை தீர்க்கும் நல்லவேளை மூலிகை!

நல்லவேளை… இப்படியொரு மூலிகைச் செடி இருக்கிறது. இதற்கு வேளைச்செடி, நல்வேளை, தைவேளை என்ற வேறு சில பெயர்களும் உண்டு. கிராமம், நகரம் என்றில்லாமல் எல்லா இடங்களிலும் வளரக்கூடியது இந்த மூலிகை. பல்வேறு நோய் தீர்க்கும் இந்த மூலிகையைப் பற்றி இன்னும் பலருக்குத் தெரியவில்லை.

கலவைக்கீரை:
வெள்ளை நிறப் பூக்களைக் கொண்டிருக்கும் இதில் சூல்கள் நிறைந்து காணப்படும். ஆனால், இந்த செடியை அடையாளம் காண்பதில்தான் பலருக்கு குழப்பம் இருக்கிறது. கீரை விற்கும் பாட்டிகள் கலவைக்கீரை என்ற பெயரில் கீரை விற்பார்கள். அந்தக் கலவைக்கீரையில் சில நேரங்களில் வேளைக்கீரையும் இடம்பெறுவதுண்டு.

பத்தோடு ஒன்று பதினொன்றாகச் சேர்த்துக் கொடுக்கும் இந்த மூலிகையின் மருத்துவக் குணம் அபரிமிதமானது. உடல் சோர்வை நீக்கி புத்துணர்ச்சி தரக்கூடிய இந்த மூலிகையை வறுமையில் வாடுவோர் சமைத்துச் சாப்பிட்டு பசி போக்கியதாக சிறுபாணாற்றுப்படை நூலில் கூறப்பட்டுள்ளது.


கபம், வாதம்:
வேளைப்பூவுடன் தூதுவேளைப்பூ சேர்த்து நெய்விட்டு வதக்கி துவையலாகச் செய்து சாப்பிடலாம். இப்படிச் சாப்பிடுவதால் நெஞ்சில் கட்டியிருக்கும் கபம் மற்றும் வாதம் சமநிலை அடையும். வேளைச் செடியின் இலைகளை நீர் விட்டுக் கொதிக்க வைத்து மோரில் ஊற வைத்து ஊட்டச்சத்துப் பானமாக அருந்தினால் சளித்தொல்லை, வாதக்கோளாறுகள் வராமல் பார்த்துக் கொள்ளலாம்.

அரிசி கழுவிய நீரில் இதன் இலைகளைப் போட்டு நொதிக்க வைத்தும் பயன்படுத்துவார்கள். சில நாடுகளில் உள்ள பழங்குடியினர் இதன் இலைகளில் ஊறுகாய் செய்து சாப்பிடுகிறார்கள். வேளைக்கீரையுடன் குடமிளகாய், பூண்டு சம அளவு சேர்த்து அரைத்து துவையல் செய்து சாப்பிடலாம். இதனால் உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புகள் கரைந்துவிடும்.

தலைவலி, சைனஸ்:
நல்லவேளை இலைச் சாற்றை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்துக் காய்ச்சி, ஆறாத புண்களின் மீது தடவினால் புண் சீக்கிரம் ஆறும். வேர் முதல் பூ வரையிலான முழு தாவரத்தையும் வெள்ளைப் பூண்டு சேர்த்துக் காய்ச்சி நாள்பட்ட தோல் நோய்களின்மீது பூசினால் குணமாகும்.

வேளைச்செடியின் பூக்கள் மற்றும் கொழுந்து இலைகளைக் கசக்கிச் சாறு பிழிந்து தாய்ப்பால் சேர்த்துக் குழந்தைகளுக்கு கொடுத்தால் சளி, இருமல் குறையும். நல்லவேளை இலைகளை இடித்து சாறு பிழிந்து அதன் சக்கையை மட்டும் தலையில் வைத்துக் கட்டினால் தலையில் கட்டிய நீர் அகலும். இப்படிச் செய்யும்போது அதன்மீது மண் பானை மூடியை வைத்து ஒரு துணியால் கட்டினால் தலைபாரம், தலைவலி நீங்கும்.

நல்லவேளைச் செடியின் முழுச் செடியையும் இடித்துப் பிழிந்து சாறு எடுத்து அதனுடன் பால், நாட்டுச் சர்க்கரை கலந்து குடித்தால் சைனஸ் விலகும். இதன் விதைகளை இடித்துப் பொடியாக்கி விளக்கெண்ணெய் சேர்த்துக் குடித்தால் வயிற்றுப் புழுக்கள் மலத்துடன் சேர்ந்து வெளியாகும்.

Most Popular

கொரோனா முன்களப் பணியாளர்கள் அனைவருக்கும் தலை வணங்குகிறேன்- குடியரசு தலைவர்

74வது சுதந்திர தினத்தை கொண்டாடும் நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார். நாட்டு மக்களிடம் உரையாற்றிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், “புதிய கல்விக் கொள்கை சிறப்பானது. தாய்மொழியில் கற்பது,...

பாடகர் எஸ்.பி.பி. நலமாகவே இருக்கிறார் -எஸ்.பி.பி மகன் சரண்

பாடகர் எஸ்.பி.பி.யின் உடல்நிலை அச்சப்படும் அளவிற்கு மோசமாக இல்லை நலமாகவே இருக்கிறார் என அவரது மகன் சரண் தெரிவித்துள்ளார். கடந்த 5ஆம் தேதி பிரபல பாடகரான எஸ்.பி சுப்பிரமணியனுத்துக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகினது....

விருதுநகர் பட்டாசு ஆலையில் 25க்கும் மேற்பட்ட குழந்தை தொழிலாளர்கள் மீட்பு!

விருதுநகரில் தியாகராஜபுரம் அருகில் ராஜகண்ணு பட்டாசு தொழிற்சாலையில் 25க்கும் மேற்பட்ட பெண் குழந்தை தொழிலாளர்கள் மீட்கபட்டுள்ளனர். கடந்த இருபதாண்டுகளில் இந்தியாவில் மட்டும் இரண்டு லட்சம் குழந்தைகள் காணாமல் போயிருக்கின்றன. குழந்தை தொழிலாளர்களாகவும், கூலிக்கு அடிமைகளாகவும்...

வாடகை போலீஸ் ட்ரஸ்ஸை மாட்டினார் – லஞ்சம் வாங்கும்போது ஒரிஜினல் போலீசிடம் மாட்டினார்- போலீஸ் அதிகாரியாக நடித்து மாமூல் வாங்கிய பெண்.

டெல்லியில் ஒரு பெண், தான் டெல்லியில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் பணி புரியும் சப் இன்ஸ்பெக்டர் என்று கூறி பலரிடம் போலியான சலான்களை கொடுத்து பணம் வசூல் செய்துள்ளார் . டெல்லியில் இரண்டு...
Do NOT follow this link or you will be banned from the site!