லாபத்தில் கோட்டை விட்ட அரசு நிறுவனம்.. நால்கோ லாபம் ரூ.17 கோடியாக சரிவு

லாபத்தில் கோட்டை விட்ட அரசு நிறுவனம்.. நால்கோ லாபம் ரூ.17 கோடியாக சரிவு

நால்கோ நிறுவனம் கடந்த ஜூன் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் லாபமாக ரூ.16.69 கோடி ஈட்டியுள்ளது.

மத்திய சுரங்க அமைச்சகத்தில்கீழ் செயல்படும் நவரத்னா அந்தஸ்து கொண்ட நிறுவனம் நால்கோ. சுரங்கம், உலோகம் மற்றும் மின்சாரம் ஆகியவற்றில் ஒருங்கிணைந்த மற்றும் பன்முகப்படுத்தப்பட்ட செயல்பாடுகளை அந்நிறுவனம் கொண்டுள்ளது. நால்கோ நிறுவனம் கடந்த ஜூன் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. அந்நிறுவனத்தின் லாபம் அந்த காலாண்டில் பலத்த சரிவை சந்தித்துள்ளது.

லாபத்தில் கோட்டை விட்ட அரசு நிறுவனம்.. நால்கோ லாபம் ரூ.17 கோடியாக சரிவு
நால்கோ

நால்கோ (நேஷனல் அலுமினியம் கம்பெனி லிமிடெட்) நிறுவனம் கடந்த ஜூன் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் லாபமாக ரூ.16.69 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 82.9 சதவீதம் குறைவாகும். 2019 ஜூன் காலாண்டில் நால்கோ நிறுவனம் லாபமாக ரூ.97.87 கோடி ஈட்டியிருந்தது.

லாபத்தில் கோட்டை விட்ட அரசு நிறுவனம்.. நால்கோ லாபம் ரூ.17 கோடியாக சரிவு
நால்கோ

2020 ஜூன் காலாண்டில் நால்கோ நிறுவனத்தின் செயல்பாட்டு வாயிலான வருவாய் ரூ.1,413.92 கோடியாக குறைந்துள்ளது. 2019 ஜூன் காலாண்டில் அந்நிறுவனத்தின் செயல்பாட்டு வாயிலான வருவாய் ரூ.2,145.47 கோடியாக உயர்ந்து இருந்தது. வர்த்தகம் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளில் சர்வதேச கோவிட்-19 பரவல் தாக்கம் வெளிப்பட்டது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.