உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே தாயாரிடம் ரூ.2.5 கோடி மோசடி… நாக்பூர் நபர் கைது

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே தாயாரிடம் ரூ.2.5 கோடி மோசடி… நாக்பூர் நபர் கைது

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே தாயாரிடம் ரூ.2.5 கோடி ஏமாற்றிய நாக்பூரை சேர்ந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே. இவரது தாயார் முக்தா பாட்டே (வயது 94) நாக்பூரில் வசித்து வருகிறார். அந்நகரில் முக்தா பாப்டேவுக்கு சீசன்ஸ் லாவன்ஸ் என்ற வர்த்தக கட்டிடம் சொந்தமாக உள்ளது. கடந்த கட்டிடத்தின் மேலாளாராக தபஸ் கோஷ் என்பவர் கடந்த 13 ஆண்டுகளாக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் தனது மேலாளர் தபஸ் கோஷ் நிதி முறைகேட்டில் ஈடுபட்டு இருப்பது முக்தா பாப்டேவுக்கு தெரியவந்தது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே தாயாரிடம் ரூ.2.5 கோடி மோசடி… நாக்பூர் நபர் கைது
வினிதா ஷாஹு

இதனையடுத்து தபஸ் கோஷ் மீது நாக்பூர் போலீசாரிடம் முக்தா பாப்டே சார்பாக அவரது குடும்பத்துக்கு நெருக்கமான நபர் புகார் கொடுத்தார். இதனையடுத்து விசாரணையில் இறங்கிய போலீசார், தபஸ் கோஷ் சுமார் ரூ.2.5 கோடி முறைகேடு செய்து முக்தா பாப்டேவை ஏமாற்றி இருப்பதை அவர்கள் கண்டுபிடித்தனர். இதனையடுத்து தபஸ் கோஷை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக காவல் துறை துணை ஆய்வாளர் வினிதா ஷாஹு கூறியதாவது:

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே தாயாரிடம் ரூ.2.5 கோடி மோசடி… நாக்பூர் நபர் கைது
கைது

முக்தா பாப்டே கொடுத்த புகாரின் அடிப்படையில் நாங்கள் விசாரணையில் ஈடுபட்டோம். தபஸ் கோஷ் கடந்த 2016ம் ஆண்டு முதல் சுமார் ரூ.2.5 கோடிக்கு மோசடியில் ஈடுபட்டு இருப்பதை கண்டு பிடித்தோம். முன்பதிவு எண்ணிக்கையை குறைத்து காட்டுதல், போலி நிதி ஆவணங்கள் உருவாக்கி உள்பட வழிமுறைகளில் மோசடி செய்துள்ளார். கோஷ் தனது மனைவி மற்றும் இன்னும் சிலருடன் இணைந்து இந்த மோசடியை செய்துள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.