தடைபட்ட திருமணம் நடைபெற நாகர் வழிபாடு!

 

தடைபட்ட திருமணம் நடைபெற நாகர் வழிபாடு!

நாகராஜனின் ஆசி பெற ஆவணி ஞாயிறு உகந்த நாளாகும். ஆவணி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று திருமணத்தடை, குழந்தை பாக்கியம், நாகதோஷங்கள், ஜாதகத்தில் உள்ளவர்கள் நாகராஜரை வழிபட்டால் நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்று பக்தர்கள் மத்தியில் திரளாக கூறப்படுகிறது.
இதற்காக ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் நாகராஜரை வழிபட ஏராளமான பக்தர்கள் நாகர் சிலை உள்ள கோயில்களில் வழிபாடு செய்வது வழக்கம்.

தடைபட்ட திருமணம் நடைபெற நாகர் வழிபாடு!
தடைபட்ட திருமணம் நடைபெற நாகர் வழிபாடு!

நாகதோஷம் உள்ளவர்களுக்கு தோல் சம்மந்தமான வியாதிகள் அதிகளவில் தருகிறது. அதனால், நாகதோஷம் உள்ளவர்கள் ஆவணி மாத ஞாயிற்றுகிழமையான இன்று நாகரை நினைத்து வழிபட்டால் தோல் வியாதி தீரும் என்பது நம்பிக்கை.
எல்லா அம்மன் கோயில்களிலும், சிவன் கோயில்களிலும் ஆலமரத்தடியில் நாகராஜர் சிலைகள் வீற்றிருக்கும். நாகராஜர் வழிபாட்டிற்கு என்று தனியாக அமைந்தக் கோவில் இதுவேயாகும்.
திருப்பாம்புரம், பாமணி, நாகப்பட்டினம், திருக்காளஹஸ்தி, திரு நாகேஸ்வரம், திருப்பனந்தாள், கீழ்ப்பெரும்பள்ளம், திருநெல்வேலி (கோடகநல்லூர்) போன்ற ஆலயங்களில் எல்லாம் மூலவரான சிவபெருமானை வழிபட்டு நாகங்கள் தங்களது கொடிய தோஷங்களைப் போக்கிக் கொண்டதால் பெருமை மிக்கதாகும்.

தடைபட்ட திருமணம் நடைபெற நாகர் வழிபாடு!

மேலும், நாகருக்கென்றே தனிக்கோவில், அதாவது நாகர் மூலவராக வீற்றிருக்கும் ஆலயம் நாகர்கோவில் நாகராஜா ஆலயம் ஆகும். இங்கே கருவறையில் நாகமே மூலவராக வீற்றிருக்கிறார்.
நாகராஜா திருக்கோயில் நாகர்கோவில் நகரத்தின் மத்திய பகுதியில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் கிழக்கு பார்த்து இருந்தாலும் தெற்கு திசையில் உள்ள கோபுரவாசல் வழியே பக்தர்கள் தரிசனத்துக்கு செல்வது வழக்கமாக இருக்கிறது.
இந்த திருக்கோயிலில் ஒவ்வொருவருடமும் ஆவணி மாதம் ஞாயிற்றுக்கிழமையையொட்டி, குமரி மாவட்டம் மட்டுமன்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கேரளா உள்ளிட்ட பல்வேறு வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பெண்கள் வருகை தந்து நாகர் சிலைகளுக்கு வேண்டுதல் வழிபாடுகளை செய்கின்றனர்.

இதன் மூலம் வேண்டுதல்கள் நிறைவேறி வருவதாகப் பெண்களின் நம்பிக்கை. மேலும், நாகதோஷங்களை ஒழிக்க இது ஒரு புண்ணியதலமாகவும் விளங்குகிறது. பிள்ளைப்பேறு வேண்டுவோர் நாகச்சிலைகளால் சூழப்பட்ட இந்த அரச மரங்களைச்சுற்றி வலம் வந்தால் பலனடைவர் என்ற நம்பிக்கையும் உள்ளது. இந்த திருக்கோயிலில் ஆவணி மாதம் எல்லா ஞாயிற்றுக்கிழமைகளிலும் சிறப்பாகத் திருவிழா நடைபெறுகிறது. என்றாலும் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று கொண்டாடப்படும் திருவிழா மிக பிரசித்தி வாய்ந்ததாக வாய்ந்ததாக கூறப்படுகிறது. உப்பு, மிளகு, பசும்பால், மரத்தினாலான மரப்பொம்மைகள் என காணிக்கைகளை செலுத்தி, நாகராஜனை வழிபாடு செய்கின்றனர்.

-வித்யா ராஜா