நாகை- சர்வர் கோளாறு – நியாய விலைக்கடைகள் முன் மக்கள் போராட்டம்

நாகை- சர்வர் கோளாறு – நியாய விலைக்கடைகள் முன் மக்கள் போராட்டம்

நாகை

நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நியாய விலைக்கடைகளில் கைரேகை பதிவு இயந்திரத்தின் சர்வர் வேலை செய்யாததால் பொருட்கள் வாங்க வந்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வேளாங்கண்ணியில்

நாகை- சர்வர் கோளாறு – நியாய விலைக்கடைகள் முன் மக்கள் போராட்டம்

உள்ள அரசு நியாயவிலைக் கடையில் இன்று அத்தியாவசியப் பொருட்களை வாங்க பொதுமக்கள் காலை 9 மணியிலிருந்து நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இந்நிலையில், நியாய விலை கடையின் கைரேகைப்பதிவு இயந்திரம் மதியம் 1 மணி வரை வேலை செய்யாததால் அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாததால் ஆத்திரமடைந்த

நாகை- சர்வர் கோளாறு – நியாய விலைக்கடைகள் முன் மக்கள் போராட்டம்

பொதுமக்கள், ரேஷன் பொருட்களை சரிவர வழங்க நடவடிக்கை எடுக்காத அரசு மற்றும் கடை ஊழியர்களை கண்டித்து திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, ரேஷன் கடையை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்ட நிலையில்

நாகை- சர்வர் கோளாறு – நியாய விலைக்கடைகள் முன் மக்கள் போராட்டம்

போலீசாரின் பேச்சுவார்த்தைக்கு பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர். இதேபோன்று, நாகை மாவட்டம் பாப்பாகோயில், அந்தனபேட்டை, காடம்பாடி, மஞ்சக்கொல்லை உள்ளிட்ட பகுதியில் உள்ள அரசு நியாயவிலைக் கடைகளிலும் கைரேகை இயந்திரத்தின் சர்வர் வேலை செய்யாததால், அங்கும் பொதுமக்கள் கடைகளை முற்றுகையிட்டு ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.