காதல்… ஆசைவார்த்தை… கருகலைப்பு… கில்லாடி சப்-இன்ஸ்பெக்டர்!- ஓராண்டாக கண்ணீருடன் போராடும் இளம்பெண்

 

காதல்… ஆசைவார்த்தை… கருகலைப்பு… கில்லாடி சப்-இன்ஸ்பெக்டர்!- ஓராண்டாக கண்ணீருடன் போராடும் இளம்பெண்

தன்னை காதலித்து ஏமாற்றி கருவை கலைத்த சப்-இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மயிலாடுதுறையை சேர்ந்த இளம்பெண் ஓராண்டுளாக சட்டப்போராட்டம் நடத்தி வருகிறார்.

காதல்… ஆசைவார்த்தை… கருகலைப்பு… கில்லாடி சப்-இன்ஸ்பெக்டர்!- ஓராண்டாக கண்ணீருடன் போராடும் இளம்பெண்
நாகை மாவட்டம், மயிலாடுதுறையை சேர்ந்த இளம்பெண் ஒருவர் சென்னையில் உள்ள தொண்டு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில், நாகை மாவட்டம் வெளிப்பாளையம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரியும் தலைஞாயிறு ஓரடியம்புலத்தைச் சேர்ந்த விவேக் ரவிராஜ் என்பவரிடம் முகநூல் மூலம் அந்த பெண்ணிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இவர்கள் இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் திருமணத்திற்கு எந்த தடையும் இருக்காது என்று அந்த பெண் நினைத்துள்ளார். இதையடுத்து, சப்-இன்ஸ்பெக்டரிடம் அந்த பெண் நெருங்கி பழகியுள்ளார். பல இடங்களுக்கு சென்ற அவர்கள், உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இதன் விளைவாக அந்த பெண் கர்ப்பம் அடைந்தார்.

இதனிடையே, சப்-இன்ஸ்பெக்டர் விவேக் ரவிராஜின் காதல் விவகாரம் அவரது வீட்டிற்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து, ரவிராஜியின் அக்கா மகளை அவருக்கு திருமணம் செய்து வைக்க வீட்டில் உள்ளவர்கள் முடிவு செய்துள்ளனர். இதற்கு விவேக் ரவிராஜ் சம்மதம் தெரிவித்துள்ளார். இதனிடையே, தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை ரவிராஜிடம் கூறியுள்ளார் அந்த பெண். இதனால் அதிர்ச்சியடைந்த ரவிராஜ், என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துள்ளார். பின்னர் அந்த பெண்ணிடம், ஓராண்டு கழித்து திருமணம் செய்து கொள்ளலாம் என ஆசை வார்த்தை கூறிய ரவிராஜ், தற்போது கருவை கலைத்துவிடு என்று கூறியுள்ளார். ரவிராஜின் ஆசைவார்த்தையை நம்பிய அந்த பெண், கருவை கலைக்க சம்மதித்துள்ளார். பின்னர் கருவை கலைக்க சென்னையில் உள்ள தனது நண்பர்கள் ஹரி, பிரேம் ஆகியோரிடம் உதவி கேட்டுள்ளார் ரவிராஜ். அவர்களும் கருவை கலைக்க ஏற்பாடு செய்துள்ளனர்.

காதல்… ஆசைவார்த்தை… கருகலைப்பு… கில்லாடி சப்-இன்ஸ்பெக்டர்!- ஓராண்டாக கண்ணீருடன் போராடும் இளம்பெண்

இதையடுத்து, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அந்த பெண்ணின் கரு கலைக்கப்பட்டது. இதையடுத்து, ரவிராஜ் தன்னுடைய சுயரூபத்தை காட்டியுள்ளார். அந்த பெண்ணிடம் பேசுவதை தவிர்த்துள்ளார் ரவிராஜ். பலமுறை செல்போனிலும், முகநூலிலும் அந்த பெண், ரவிராஜை தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் எந்த பதிலும் அவர் அளிக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அந்த பெண் தன்னை உடனடியாக திருமணம் செய்து கொள்ளும்படி ரவிராஜிடம் செல்போனில் கெஞ்சியும், கதறியும் உள்ளார். அந்த பெண்ணின் கதறலை கண்டுகொள்ளாத ரவிராஜ், உனக்கும் எனக்கும் உள்ள தொடர்பை வெளியில் சொன்னால் என் அதிகாரத்தை பயன்படுத்தி உன்னையும் உன் குடும்பத்தினரையும் கொன்று விடுவேன் என்று மிரட்டியுள்ளார். தற்போது, சப்-இன்ஸ்பெக்டர் ரவிராஜ் பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது. திருமணம் செய்து கொள்ளும்படி கதறி அழும் அந்தப்பெண்ணை தகாத வார்த்தைகளால் ஒருமையில் பேசி மிரட்டலும் விடுத்தார் ரவிராஜ். இதையடுத்து, அந்த பெண், காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரின் பேரில் ரவிராஜ் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனை நாகை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விசாரணை நடந்து வருவதாகவும், நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதாகவும் நீதிமன்றத்தின் உத்தரவு படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எஸ்.பி. கூறியுள்ளார். தன்னை காதலித்து ஏமாற்றி கருவை கலைக்க செய்த சப்-இன்ஸ்பெக்டருக்கு எதிராக அடுக்கடுக்கான ஆதாரங்களுடன், ஓராண்டாக இந்த பெண் போராடி வருகிறார். உள்ளூர் காவல்நிலையம், எஸ்.பி. அலுவலகம், சென்னை காவல் ஆணையர் அலுவலகம், டிஜிபி அலுவலகம், நீதிமன்றம் என அலைந்து வருகிறார் அந்த பெண், சாத்தான் குளம் விவகாரத்தில் தவறு செய்த காவல்துறையினர் மீது நடடிவக்கை எடுத்ததுபோல், தன்னை ஏமாற்றிய காவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.