இந்தியாவில் ஜனநாயகம் உள்ள ஒரே கட்சி பா.ஜ.க.தான்.. இங்கு சாமானிய மனிதனும் பிரதமர் ஆக முடியும்.. ஜே.பி.நட்டா

இந்தியாவில் ஜனநாயகம் உள்ள ஒரே கட்சி பா.ஜ.க.தான்.. இங்கு சாமானிய மனிதனும் பிரதமர் ஆக முடியும்.. ஜே.பி.நட்டா

இந்தியாவில் ஜனநாயகம் உள்ள ஒரே கட்சி பா.ஜ.க.தான். இங்கு சாமானிய மனிதனும் பிரதமர் ஆக முடியும் என்று ஜே.பி. நட்டா தெரிவித்தார்.

லக்னோவில் பா.ஜ.க.வின் பூத் தலைவர்கள் மாநாடு நடைபெற்றது. அதில் பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில் கூறியதாவது: நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பெரும்பாலான அரசியல் கட்சிகளிலும் குடும்ப அரசியல் நிலவுகிறது. சாதாரண பின்னணி கொண்ட மனிதன் பிரதமராக அல்லது உள்துறை அமைச்சராக, பாதுகாப்பு துறை அமைச்சராக அல்லது ஒரு முதல்வராக மாறும் ஒரே கட்சி பா.ஜ.க. மட்டுமே.

இந்தியாவில் ஜனநாயகம் உள்ள ஒரே கட்சி பா.ஜ.க.தான்.. இங்கு சாமானிய மனிதனும் பிரதமர் ஆக முடியும்.. ஜே.பி.நட்டா
மோடி, அமித் ஷா

பா.ஜ.க. ஒரு ஜனநாயக கட்சி. ஒரு தலைவர், விதி, கொள்கை, தொண்டர்கள் மற்றும் திட்டம் கொண்ட ஒரே கட்சி இது. மனிதநேயத்தை ஒருங்கிணைத்து காலச்சார தேசியவாதத்துடன் நாம் முன்னேறினோம். வரிசையில் உள்ள கடைசி நபருக்காகவும் நாம் பணியாற்றி வருகிறோம். அனைவருக்கும் உண்மை, அனைவருக்கும் வளர்ச்சி அனைவருக்கும் நம்பிக்கை இதுதான் எங்களது குறிக்கோள்.

இந்தியாவில் ஜனநாயகம் உள்ள ஒரே கட்சி பா.ஜ.க.தான்.. இங்கு சாமானிய மனிதனும் பிரதமர் ஆக முடியும்.. ஜே.பி.நட்டா
ஜே.பி. நட்டா

எங்களது குறிக்கோள்களிலிருந்தே உஜ்வாலா திட்டம், உஜலா திட்டம், சுவுபாக்யா திட்டம் மற்றும் ஜன் தன் திட்டம் போன்ற பொது நல திட்டங்கள் உருவாகியுள்ளன. பூத் தலைவர்கள் சாவடிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அரசியல் பிரச்சினைகளுடன் மக்களை சென்றடைய வேண்டும். நீங்கள் அனைவரும் கட்டுப்பாடு, வாதங்கள் மற்றும் லேசான தன்மையுடன் இணைக்கு சக்தியுடன் உங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.