“இறந்தவர்கள் கண்ணுக்கு தெரிகிறார்கள்; பேசுகிறார்கள்” – மூளையை தாக்கும் மர்ம நோயால் அச்சம்!

“இறந்தவர்கள் கண்ணுக்கு தெரிகிறார்கள்; பேசுகிறார்கள்” – மூளையை தாக்கும் மர்ம நோயால் அச்சம்!

உலக நாடுகள் கொரோனா அச்சத்திலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வருகின்றனர். ஆனால் அதைக் கெடுக்கும் விதமாக புதுப்புது நோய்கள் பிரசவித்து பீதியை ஏற்படுத்துகின்றன. மக்களிடம் ஒருவித அமைதியின்மை நிலவுகிறது. இந்தியாவில் பல வண்ணங்களில் பூஞ்சை நோய் தாக்கி வந்தால், சீனாவில் திடீரென்று பறவைக் காய்ச்சல் மனிதர் ஒருவருக்குப் பரவியிருக்கிறது. தொடர்ச்சியாக தொற்று நோய்கள் மக்களைத் தாக்கி சகஜ நிலைக்குத் திரும்பவிடாமல் செய்கின்றன.

“இறந்தவர்கள் கண்ணுக்கு தெரிகிறார்கள்; பேசுகிறார்கள்” – மூளையை தாக்கும் மர்ம நோயால் அச்சம்!

இச்சூழலில் தற்போதைய புதுவரவாக என்னவென்றே கண்டுபிடிக்க முடியாத மர்ம நோய் கனடாவில் முளைத்திருக்கிறது. கடந்த ஆறு ஆண்டுகளில் அந்த வகை நோயால் ஆறு பேர் பலியாகியிருக்கின்றனர். 48 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோயானாது நேரடியாக மூளை சார்ந்த நரம்புகளைத் தாக்குவதால் அதுசார்ந்த அறிகுறிகள் தென்படுகின்றன. மிக மிக முக்கியமாக ஒருவித பிரமை போல் (Visual Hallucination) ஏற்பட்டு இறந்தவர்கள் கண்ணுக்குத் தெரிவதாகவும், அவர்களிடம் பேசுவது போலவும் (3 பட தனுஷிடம் பேசுவது போல) அறிகுறிகள் காணப்படுகின்றன.

“இறந்தவர்கள் கண்ணுக்கு தெரிகிறார்கள்; பேசுகிறார்கள்” – மூளையை தாக்கும் மர்ம நோயால் அச்சம்!

அதேபோல தூக்கமின்மை, பார்வை குறைபாடு, கொஞ்சம் கொஞ்சமாக மறையும் மெமரி பவர் உள்ளிட்ட அபாயகரமான அறிகுறிகளும் இந்நோயால் பாதிக்கப்பட்ட மக்களிடம் தென்படுவதாகக் கூறப்படுகிறது. இந்த நோய்க்கான தெளிவான காரணம் என்னவென்று தெரியாததால் எவ்வாறு சிகிச்சையளிப்பது என மருத்துவர்கள் குழம்பி போயுள்ளனர். செல்போன் டவர்களால் வெளியிடப்படும் கதிர்வீச்சுகளால் இம்மாதிரியான பாதிப்பு ஏற்படலாம் என சுகாதாரத் துறையினர் சந்தேகிக்கின்றனர்.