“மீண்டும் அழுத்தி சொல்வேன்; பாஜகவால் தான் தோற்றோம்” – ஓபிஎஸ்ஸை எதிர்க்கிறாரா சி.வி. சண்முகம்?

“மீண்டும் அழுத்தி சொல்வேன்; பாஜகவால் தான் தோற்றோம்” – ஓபிஎஸ்ஸை எதிர்க்கிறாரா சி.வி. சண்முகம்?

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் நிறைவுபெற்றதிலிருந்து அதிமுகவுக்குள் குழப்பம் ஏற்பட்டு வந்தது. ஓபிஎஸ் எதிர்க்கட்சி துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் ஓரளவு சாந்தமானது. தற்போது மறுபடியும் அரசியல் களம் அனல் பறக்கிறது. அதற்குக் காரணம் மாஜி அமைச்சர் சி.வி.சண்முகம். பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் தான் அதிமுகவிற்கு சிறுபான்மையினர் வாக்குகள் கிடைக்கவில்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. இந்தக் கருத்தை அதிமுகவின் அடிமட்ட தொண்டர்கள், நிர்வாகிகள் வரை கூறிவந்தாலும் அதிகாரமிக்க உயர் பொறுப்புகளில் இருக்கும் தலைவர்களோ, முன்னாள் அமைச்சர்களோ இதுகுறித்து எதுவும் கூறவில்லை.

“மீண்டும் அழுத்தி சொல்வேன்; பாஜகவால் தான் தோற்றோம்” – ஓபிஎஸ்ஸை எதிர்க்கிறாரா சி.வி. சண்முகம்?

தற்போது பூனைக்கு மணி கட்டிவிட்டிருக்கிறார் சி.வி.சண்முகம். வானூர் ஒன்றிய அதிமுக சார்பில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் வானூர் பகுதியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய அவர், “பாஜகவுடன் கூட்டணி வைத்த காரணத்தால் சிறுபான்மையினரின் வாக்குகளை நாம் முழுமையாக இழந்துவிட்டோம். முந்தைய அதிமுக ஆட்சி மீது மக்களுக்குக் கோபம் கிடையாது. நாம் ஆட்சிக்கு வரவேண்டும் என்று வாக்களிக்கத் தயாராக இருந்தார்கள். ஆனால் கூட்டணி கணக்கு சரியில்லை. சிறுபான்மையினர் வாக்கு சிதறியதால் நாம் இந்தத் தோல்வியைச் சந்திக்க நேர்ந்தது” என்றார்.

“மீண்டும் அழுத்தி சொல்வேன்; பாஜகவால் தான் தோற்றோம்” – ஓபிஎஸ்ஸை எதிர்க்கிறாரா சி.வி. சண்முகம்?

இந்தக் கருத்து பெரும் விவாதத்துக்குள்ளானது. இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக பாஜக நிர்வாகி கே.டி.ராகவன் ட்விட்டரில் சி.வி.சண்முகத்தை டேக் செய்து, “உங்களால் தான் என்ற எண்ணம் எங்களிடமும் உண்டு” என்று பதிவிட்டிருந்தார். எப்போதுமே டேமேஜ் கன்ட்ரோல் செய்யும் புலியான மற்றொரு மாஜியான ஜெயக்குமார் களமிறக்கி விடப்பட்டார். அதாவது அது சண்முகத்தின் தனிப்பட்ட கருத்து… பாஜகவுடன் கூட்டணி வைப்பதை நானோ, சண்முகமோ தீர்மானிக்க முடியாது. அது தலைமையின் கைகளில் இருக்கிறது என்றார்.

“மீண்டும் அழுத்தி சொல்வேன்; பாஜகவால் தான் தோற்றோம்” – ஓபிஎஸ்ஸை எதிர்க்கிறாரா சி.வி. சண்முகம்?

இதற்குப் பின் “ஆங்கிலத்திலும்” தமிழிலும் அறிக்கை வெளியிட்ட அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், “தேச நலன், தமிழ்நாட்டின் நலன் கருதி அதிமுக – பாஜக கூட்டணி தொடரும். இதில் எந்தவித மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை. பாஜக மீதும், மோடி மீதும் முழு நம்பிக்கை வைத்துள்ளோம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்குப் பின் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என நினைக்கையில், சி.வி.சண்முகம் மீண்டும் பிரச்சினையைக் கிளப்பியிருக்கிறார்.

“மீண்டும் அழுத்தி சொல்வேன்; பாஜகவால் தான் தோற்றோம்” – ஓபிஎஸ்ஸை எதிர்க்கிறாரா சி.வி. சண்முகம்?

இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பாஜக கூட்டணி பற்றிய எனது கருத்தில் எந்த மாற்றமும் இல்லை. நான் கூறியது எனது சொந்த கருத்து. பாஜக கூறியது அவர்களது கருத்து. கட்சிக்குள் பல கருத்துகளைப் பேசுவோம். கட்சித் தலைமை என்ன முடிவு எடுக்கிறதோ அதன்படி செயல்படுவோம்” என்றார்.