’’என் கனவு நிறைவேறியிருக்கிறது’’ – வீடியோவில் அத்வானி உருக்கம்

 

’’என் கனவு நிறைவேறியிருக்கிறது’’ – வீடியோவில் அத்வானி உருக்கம்

யோத்தில் நாளை ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை கோலாகலமாக நடைபெற இருக்கின்ற நிலையில், பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ’’ராமர் கோயில் கட்ட வேண்டும் என்பது என் இதயற்கு நெருக்கமான கனவு. எனது நீண்டநாள் கனவு நிறைவேறி இருக்கிறது. எனக்கு மட்டுமல்ல, நாட்டு மக்களுக்கு இது வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சி. இந்த ராமர்கோயில் அமைதற்காக தியாகங்கள் மேற்கொண்ட அனைவரையும் நன்றியுடன் நினைவுகூருகின்றேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

’’என் கனவு நிறைவேறியிருக்கிறது’’ – வீடியோவில் அத்வானி உருக்கம்

1990ல் அப்போது பாஜகவின் தலைவராக இருந்த எல்.கே. அத்வானி அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக சர்ச்சைக்குரிய இடத்தை இந்துக்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தி ரத யாத்திரையை மேற்கொண்டார். குஜராத்தின் சோம்நாத்தில் தொடங்கிய ரத யாத்திரை மகாராஷ்டிரா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்கள் வழியே பீகாரை சென்றடைந்தது.

பீகார் முதல்வராக இருந்த லாலு பிரசாத் யாதவ், அத்வானியின் ரத யாத்திரயை தடுத்து நிறுத்தி அவரை கைது செய்தாலும் அத்வானியின் ஆதரவாளர்கள் அயோத்தி நோக்கி சென்றனர். அத்வானியின் ரத யாத்திரை வலம் வந்த பகுதிகளில் மோதல்கள் வெடித்து, 500க்கும் மேற்பட்டோர் பலியாகினர். உத்தரப்பிரதேசத்தில்தான் நடந்த மோதலில் 200க்கும் அதிகமானோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.