“பொதுப்பணியில் மீண்டும் முழு உற்சாகத்துடன் செயல்பட வேண்டும்” :மு.க. ஸ்டாலின் ட்வீட்!

 

“பொதுப்பணியில் மீண்டும் முழு உற்சாகத்துடன் செயல்பட வேண்டும்” :மு.க. ஸ்டாலின் ட்வீட்!

நடிகர் விஜயகாந்த் நலமடைய திமுக தலைவர் முக ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கொரோனா தோற்று காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

“பொதுப்பணியில் மீண்டும் முழு உற்சாகத்துடன் செயல்பட வேண்டும்” :மு.க. ஸ்டாலின் ட்வீட்!

இந்நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், தே.மு.தி.க. தலைவரும் அருமை நண்பருமான விஜயகாந்த் அவர்கள் உடல்நலக் குறைவினால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதை அறிந்தேன்.
அவர் விரைவில் முழுநலம் பெற்று பொதுப்பணியில் மீண்டும் முழு உற்சாகத்துடன் செயல்பட வேண்டும் என்ற எனது பெருவிருப்பத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

நீண்ட காலமாக உடல்நல குறைவால் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் இருந்த விஜயகாந்த் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் தேமுதிக தொண்டர்கள் அவர் விரைவில் மீண்டு வர பிரார்த்தனை செய்து வருகின்றனர்.