“சென்சார் மூலம் உருவாக்கப்பட்ட கோவில் மணி” : பக்தர்கள் பாதுகாப்புக்காக அமைத்து கொடுத்த முஸ்லீம் முதியவர்!

“சென்சார் மூலம் உருவாக்கப்பட்ட கோவில் மணி” : பக்தர்கள் பாதுகாப்புக்காக அமைத்து கொடுத்த முஸ்லீம் முதியவர்!

இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் தற்போது கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 3,43,091 லிருந்து 3,54,065 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 1,86,935 பேர் குணமடைந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11,903 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

“சென்சார் மூலம் உருவாக்கப்பட்ட கோவில் மணி” : பக்தர்கள் பாதுகாப்புக்காக அமைத்து கொடுத்த முஸ்லீம் முதியவர்!

இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலம் மந்த்சாரில் உள்ள பசுபதிநாத் கோவில் மணியானது சென்சார் மூலம் செயல்படும்படி அமைக்கப்பட்டுள்ளது. இந்த மணியை கைவைத்து அடிக்க வேண்டிய அவசியமில்லை. கையை மணி அருகே கொண்டு சென்றாலே மணி அடிப்பது போல உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் கொரோனா அச்சமில்லாமல் பக்தர்கள் நிம்மதியாக கடவுளை வணங்க முடிகிறது என கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

“சென்சார் மூலம் உருவாக்கப்பட்ட கோவில் மணி” : பக்தர்கள் பாதுகாப்புக்காக அமைத்து கொடுத்த முஸ்லீம் முதியவர்!

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சென்சார் மூலம் உபயோகிக்கும்படி கோவில் மணியை பக்தர்களுக்காக அமைத்துக் கொடுத்தவர் நாரு கான் மேவ் என்ற முஸ்லிம் நபர் ஆவார். 62 வயதான இவர் ரூபாய் 6 ஆயிரம் செலவில் இந்த சென்சார் மணியை அமைத்துக் கொடுத்துள்ளார். இதுகுறித்து கூறியுள்ள அவர், “ஊரடங்கின் போது கோவில்கள் பல நாட்கள் மூடப்பட்ட நிலையில் சில தளர்வுகள் அடிப்படையில் மசூதிகளும், கோவில்களும் திறக்கப்பட்டது. மசூதிகளில் அஸான் ஓத அனுமதி கிடைத்தது. அதேபோல் கோவிலுக்கு வரும் பக்தர்களும் மணியை பயன்படுத்த வேண்டும் என்று நான் விரும்பினேன். அதன் காரணமாகத்தான் சென்சார் மூலம் மணியை தயாரித்து கோவிலுக்கு வழங்கினேன் என்று முதியவர் நாரு கான் மேவ் தெரிவித்துள்ளார்.