ஐபிஎல்: ப்ளே ஆஃப் வாய்ப்பை இழந்தது சென்னை! மும்பை அணி அபார வெற்றி!!

 

ஐபிஎல்: ப்ளே ஆஃப் வாய்ப்பை இழந்தது சென்னை! மும்பை அணி அபார வெற்றி!!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய 41-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. சார்ஜாவில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த சென்னை அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக பாப் டு பிளிஸ்சிஸ், ருதுராஜ் கெய்க்வாடும் களமிறங்கினார். ஆட்டத்தின் முதல் ஓவரிலிருந்தே சென்னை அணி வீரர்கள் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். முதலில் ருதுராஜ் கெய்க்வாட், ஒரு ரன் கூட எடுக்காமல் டக் அவுட்டானார்.

தொடர்ந்து அடுத்த ஓவரில் ஜெகதீசனும் ராயுடும் மைதானத்திலிருந்து நடையை கட்டினர். மூன்றாவது ஓவரில் டூ பிளிஸ்சிஸ் ஒரே ஒரு ரன் மட்டுமே எடுத்து அவுட்டானார். அடுத்து களமிறங்கிய ஜடேஜா 7 ரன்களிலும், கேப்டன் தோனி 16 ரன்களிலும் அவுட்டாகியதால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். அதிகபட்சமாக அணியின் கடைக்குட்டி சிங்கம் என அழைக்கப்படும் சாம் கரண், 52 ரன்கள் ஆட்டமிழந்தார். இறுதியாக 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்களை இழந்த சென்னை அணி 114 ரன்கள் மட்டுமே எடுத்தது.

ஐபிஎல்: ப்ளே ஆஃப் வாய்ப்பை இழந்தது சென்னை! மும்பை அணி அபார வெற்றி!!

115 என்ற எளிய இலக்குடன் தனது ஆட்டத்தை தொடர்ந்த மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டி காக் மற்றும் இஷன் கிஷன் களமிறங்கினர். எளிய இலக்கு என்பதால் இந்த ஜோடி ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடியது. அதிரடியாக ஆடிய இஷன் கிஷன் 29 பந்துகளில் தனது அரைசதத்தை கடந்தார். 12.2 ஓவர் முடிவில் மும்பை அணி விக்கெட் இழப்பின்றி 116 ரன்களை எட்டியது. இஷன் கிஷன் 68 ரன்களுடனும் டி காக் 46 ரன்களுடனும் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது. இதன் மூலம் மும்பை அணி ப்ளே ஆப் சுற்றுக்கு வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதி செய்தது. இந்தத் தோல்வியின் மூலம் சென்னை அணி முதல் அணியாக ஐபிஎல்லில் இருந்து வெளியேறியது.