ஐபிஎல் பாயிண்ட் டேபிளில் மும்பை முதலிடம் – அப்ப சென்னை?

 

ஐபிஎல் பாயிண்ட் டேபிளில் மும்பை முதலிடம் – அப்ப சென்னை?

கடந்த ஏழு மாதங்களாக லாக்டெளனில் எந்த சுவாரஸ்யமும் இல்லாத கழிந்தன நாட்கள். தற்போதைய ஒரே உற்சாகமான பொழுதுபோக்கு ஐபிஎல் போட்டிகள்தாம்.

இந்த ஆண்டு ஐபிஎல் கோப்பையை வெல்லப்போவது யார் என்று ஒவ்வொருவரும் கணித்து வருகின்றனர். பலர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைத் தேர்வு செய்தனர். ஆனால், அந்த டீமில், ரெய்னா, ஹர்பஜன், நேற்று ராயுடு என முன்னணி வீரர்கள் ஏதேனும் ஒரு காரணம் சொல்லி விலகி வருகின்றனர்.

ஐபிஎல் பாயிண்ட் டேபிளில் மும்பை முதலிடம் – அப்ப சென்னை?

செப்டம்பர் 19-ம் தேதி தொடங்கிய ஐபிஎல் திருவிழாவில் சென்னை, மும்பை ஆகியவை இரு போட்டிகளில் ஆடி தலா ஒரு போட்டியில் வென்றுள்ளது. நேற்று மும்பை இண்டியன்ஸ் அணி, கொல்கத்தாவை பந்தாடியது என்றே சொல்லலாம். அந்தளவுக்கு பேட்டிங், பவுலிங் இரண்டிலும் அசத்தியது மும்பை.

ஐபிஎல் பாயிண்ட் டேபிளில் மும்பை முதலிடம் – அப்ப சென்னை?

நேற்றைய வெற்றியால் மும்பை இண்டியன்ஸ் ஐபிஎல் பாயிண்ட் டேபிளில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இரு போட்டிகளில் ஆடி, ஒன்றில் வெற்றி, ஒன்றில் தோல்வி பெற்று 2 பாயிண்ட்டுகள் எடுத்து முதலிடம் பெற்றுள்ளது. இதே நிலைதான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும். அதுவும் இரு போட்டிகளில் ஆடி, ஒன்றில் வெற்றி, ஒன்றில் தோல்வியைச் சந்தித்தது. ஆனால், அது நெட் ரன்ரேட்டில் மிகவும் குறைவாக இருப்பதால் 5 வது இடத்தையே பிடிக்க முடிந்திருக்கிறது. மும்பை NRR : +0.99, சென்னை : – 0.14.

ஐபிஎல் பாயிண்ட் டேபிளில் மும்பை முதலிடம் – அப்ப சென்னை?

முதலிடத்தில் மும்பை, இரண்டாம் இடத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ்,  மூன்றாம் இடத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, நான்காம் இடத்தில் டெல்லி கேப்பிடல்ஸ், ஐந்தாம் இடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், ஆறாம் இடத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப், ஏழாம் இடத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், எட்டாம் இடத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளும் இடம் பிடித்துள்ளன.

ஐபிஎல் இப்போதுதான் தொடங்கியிருக்கிறது என்பதால் இந்தப் பட்டியலில் நிச்சயம் பெரியளவு மாற்றம் வரும். பாயிண்ட்ஸ் டேபிளில் முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகளே ப்ளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறும்.