நியூமராலாஜி நம்பிக்கை… நடிகை சன்னி லியோனின் கார் நம்பரை பயன்படுத்திய தொழிலதிபர் கைது

 

நியூமராலாஜி நம்பிக்கை… நடிகை சன்னி லியோனின் கார் நம்பரை பயன்படுத்திய தொழிலதிபர் கைது

நியூமராலாஜி நம்பிக்கையில் நடிகை சன்னி லியோனின் கார் நம்பரை மோசடியாக பயன்படுத்திய தொழிலதிபரை

நியூமராலாஜி (எண் ஜோதிடம்) என்பது எண்களுக்கும், வாழ்வின் நிகழ்வுகளுக்கும் தொடர்பு இருப்பதாக கூறி அதன் அடிப்படையில் வருங்காலத்தை கணிக்கும் ஜோதிடமாகும். உதாரணமாக ஒருவடைய பிறந்த தேதி, வீட்டின் இலக்கம், பெயர் எழுத்துக்களின் கூட்டுத்தொகை போன்ற எண்களுக்கும் அவருக்கு நிகழக்கூடிய இன்ப துன்பங்களுக்கும் தொடர்பு இருப்பதாக நம்பப்படுகிறது. ஆகையால் ஒருவர் தனது பெயரை மாற்றி அவருக்கு சாதகமான எண் உடைய பெயர் வைத்தால் அவருக்கு நன்மைகள் விளையும் என்று கூறப்படுகிறது.

நியூமராலாஜி நம்பிக்கை… நடிகை சன்னி லியோனின் கார் நம்பரை பயன்படுத்திய தொழிலதிபர் கைது
நியூமராலஜி

நிச்சயம் அதிர்ஷ்டத்தை கொடுக்கும் என்ற நியூமராலஜி மீதான நம்பிக்கையில் சிலர் மேற்கொள்ளும் செயல்கள் அவர்களுக்கு எதிர்மறையான விளைவுகளை கொடுத்து விடுகிறது. அதேபோன்று ஒரு சம்பவம் மும்பையில் நடந்துள்ளது. மும்பையை சேர்ந்த ஒரு தொழிலதிபர் தனது காரில் சென்றுள்ளார். அப்போது அவரது காரை நிறுத்திய வெர்சோவா போலீசார் காரின் ஆவணங்களை பரிசோதனை செய்துள்ளனர்.

நியூமராலாஜி நம்பிக்கை… நடிகை சன்னி லியோனின் கார் நம்பரை பயன்படுத்திய தொழிலதிபர் கைது
மும்பை போக்குவரத்து போலீசார்

அப்போது, அந்த காரில் மாட்டப்பட்டுள்ள பதிவு எண் போலியானது தெரியவந்தது. அந்த காரில் மாட்டப்பட்டு இருந்த பதிவு எண் நடிகை சன்னி லியோனின் காரின் எண்ணாகும். இதனையடுத்து போலீசார் தொழிலதிபரிடம் விசாரணை நடத்தினார்கள். விசாரணையின் போது, நியூமராலஜி நம்பிக்கையில் வாகனத்தில் போலி எண்ணை பயன்படுத்தியதாக தொழிலதிபர் தெரிவித்தார். இதனையடுத்து போக்குவரத்து விதிமுறைகளை மீறியது மற்றும் சட்டவிரோதமாக காரின் நம்பர் பிளேட்டை மாற்றிய குற்றங்களுக்காக அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.