இந்திய அணியில் இடம் இல்லை… பேட்டால் பதில் சொன்ன சூர்யகுமார்!

 

இந்திய அணியில் இடம் இல்லை… பேட்டால் பதில் சொன்ன சூர்யகுமார்!

இரண்டு நாட்களுக்கு முன், ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணி வீரர்களின் பட்டியல் அறிவிக்குப்பட்டது. அதில் பலருக்கும் அதிர்ச்சியான விஷயம், ஒருநாள் மற்றும் டி20 இரண்டிலுமே சூர்யகுமார் பெயர் இல்லாததே!

இந்த ஐபிஎல் தொடரில் நன்கு விளையாடி வரும் ராகுல், நடராஜன், வருண் சக்கரவர்த்திக்கு வாய்ப்பு அளிக்கும்போது ஏன் சூர்யகுமாருக்கு இடம் இல்லை என்ற கேள்வி பலருக்கும் இருந்தது. ஐபில் வர்ணனையாளர்கள் அதை வெளிப்படுத்தி வந்தனர். இதற்கு நேற்று தனது பேட்டால் பதில் சொல்லியிருக்கிறார் சூர்யகுமார் யாதவ்.

இந்திய அணியில் இடம் இல்லை… பேட்டால் பதில் சொன்ன சூர்யகுமார்!

நேற்றைய ஐபிஎல் போட்டி ராயல் சேலஞ்சர்ஸ் vs மும்பை இண்டியன்ஸ். ரோஹித் ஷர்மா கேப்டன்ஷிப் + பேட்டிங் இல்லாததால் மும்பைக்குப் பின்னடைவு எனப் பலரும் யூகித்தனர். ஆனால், கேப்டன் சுமையை பொல்லார்டு சுமந்தார். பேட்டிங் பொறுப்பை ஒற்றை ஆளாய் தோளில் சுமந்து இறுதி வரை வெற்றியைப் பெற்றுத்தந்தது சூர்யகுமார் யாதவ்.

இந்த ஐபிஎல் சீசனில் சூர்யகுமாரின் பர்ஃபாமன்ஸ் சிறப்பாகவே இருக்கிறது. அணியில் மூன்றாம் இடத்தில் ஆடுவது எளிதான ஒன்றல்ல. தொடக்க வீரர்கள் சொற்ப ஓவர்களில் அவுட்டாகி விட்டால், அந்தப் பொறுப்பை ஏற்றுகொண்டு ஆட வேண்டும். மாறாக, தொடக்க வீரர்கள் போட்டியின் கடைசி கட்டத்தில் அவுட்டானால் முதல் பந்திலிருந்தே அடித்து ஆட வேண்டும். இதை நன்கு உணர்ந்தவர் சூர்யகுமார்.

இந்திய அணியில் இடம் இல்லை… பேட்டால் பதில் சொன்ன சூர்யகுமார்!

ஐபிஎல் 2020 –ல் 12 போட்டிகளில் 10 ஆட்டங்களில் களம் இறங்கியுள்ளார் சூர்யகுமார். கொல்கத்தா 47 (28பந்துகளில்), ராஜஸ்தான் 79 (49பந்துகளில்), டெல்லி 53 (32 பந்துகளில்), ராஜஸ்தான் 40 (26பந்துகளில்), பெங்களூர் 79 (43பந்துகளில்). மொத்தமாக 362 ரன்களை அடித்திருக்கிறார். 48 பவுண்ட்ரி, 8 சிக்ஸர் இதில் அடக்கம். ஸ்ட்ரைக் 155.36.

நேற்றைய போட்டியில் டி காக் 18, கிஷன் 25, திவாரி 5, க்ருணால் பாண்டியா 10, ஹிர்திக் பாண்டியா 17 என்று வரிசையாக எதிர்புறம் அவுட்டாகி கொண்டே இருந்தாலும் சூர்யகுமாரின் நிலையான அதிரடி ஆட்டம்தான் மும்பைக்கு வெற்றியை ருசிக்க வைத்தது. இல்லையெனில் தோற்றிருக்கவும் வாய்ப்பிருந்தது. 

இந்திய அணியில் இடம் இல்லை… பேட்டால் பதில் சொன்ன சூர்யகுமார்!

இந்திய அணியில் தனக்கு இடம் இல்லை என்றதும் தனது அதிரடி ஆட்டம் மூலமே பதில் சொல்லியிருக்கிறார் சூர்யகுமார். அதிலும் போட்டியை வென்றதும், நிதானமாக ‘நானிருக்க பயமேன்’என்பதாக வித்தியாசமாக வெற்றி கொண்டாட்டத்தை நிகழ்த்தினார். இந்திய அணியின் தேர்வுக் குழுவுக்கு இதுவே சரியான பதிலாக இருக்க முடியும். வெல்டன் சூர்யா.